உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் உயிரிழப்பு மக்களே பொறுப்பு

கரூரில் உயிரிழப்பு மக்களே பொறுப்பு

கரூர் மரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழு கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், அது குறித்து எதுவும் கருத்து கூறுவது சரியாக இருக்காது. கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு ஓரளவுக்கு பொறுப்பு இருந்தாலும், காவல்துறை, சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் பொறுப்பு. ஆனால், மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் சரியாக இருந்திருந்தால், கரூரில் இந்த சம்பவம் நடந்திருக்காது. ஜாதி வன்மம் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சொல்லி வருகிறார். அப்படியொரு சமூகம் அமைய வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தும். - துரை வைகோ, முதன்மை செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை