உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

மத்திய அரசின் செயல்களை மக்கள் பார்க்கின்றனர்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛மத்திய பா.ஜ., அரசின் ஒவ்வொரு செயல்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழகம் கோரியது ரூ.37,907 கோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உள்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை ரூ.2,477 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், மத்திய பா.ஜ., அரசு தற்போது அறிவித்து இருப்பதோ வெறும் ரூ.276 கோடி. இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jimdrtyp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்திற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பா.ஜ., அரசின் ஒவ்வொரு செயல்களையும் நம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு அந்தப் பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

S.V.Srinivasan
ஏப் 30, 2024 11:55

மத்திய அரசு அளித்த நிதி நாலாயிரம் கோடிக்கு கணக்கு காட்டவே இல்லையாமே எப்போது கொடுப்பீர்கள்??


S.V.Srinivasan
ஏப் 30, 2024 11:52

மத்திய அரசு மக்களுக்கு செய்கிறார்கள், அதை மக்கள் பார்க்கிறார்கள் இதிலென்ன அதிசயம் முக்கிய மந்திரி அவர்களே


Venkataraman
ஏப் 30, 2024 11:47

அதேபோல தமிழக அரசின் ஊழல்களையும், போதைப்பொருள் கடத்தலையும் மத்திய அரசு கவனித்து வருகிறது ஜூன் தேதிக்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கை துவங்கும்


HoneyBee
ஏப் 30, 2024 08:44

அதனால் தான் அவுக செய்த நல்ல காரியங்களை வைத்து ஓட்டு கேட்கறாக நீங்க அவுகளை குறை சொல்லி ஓட்டு கேட்டீங்க


Indhuindian
ஏப் 30, 2024 05:51

சரியா சொன்னீங்க அவங்க செய்யறாங்க மக்கள் அதை பாக்கறீங்க பாக்கற மாதிரி நீங்க என்ன பண்ணீங்க மக்கள் பாக்கறதுக்கு சாராய கடையையும் கோதுமை பீரையும்தான் மக்கள் பாக்கணும்


K.Rajasekaran
ஏப் 29, 2024 05:05

இவரையும் இவரது செயல்பாட்டையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள், இறைவனும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்


kumarkv
ஏப் 29, 2024 01:16

மாநில அரசிடம் பார்க ஒன்றும் இல்லை


sundarsvpr
ஏப் 28, 2024 20:02

மத்திய அரசு போதிய நிநாயமான உதவி நிவாரணங்கள் வழங்கவில்லையெனின் இந்தியா கூட்டணி ஏன் இதை பற்றி எதுவும் கூறாமல் மௌனமாய் உள்ளது உள்ளம் உரை செயல் எதிர்கட்சிகளிடையில் வேற்றுமை உள்ளது


Cheran Perumal
ஏப் 28, 2024 19:40

மானில அரசின் செயல்களை மக்கள் பார்ப்பதில்லை ஏனெனில் கொள்ளையடிப்பதைத்தவிர மானில அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்களுக்குப்புரிகிறது


Cheran Perumal
ஏப் 28, 2024 19:40

மானில அரசின் செயல்களை மக்கள் பார்ப்பதில்லை ஏனெனில் கொள்ளையடிப்பதைத்தவிர மானில அரசு எதையுமே செய்யவில்லை என்று மக்களுக்குப்புரிகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை