உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து கட்சியில் இருந்தும் தி.மு.க.,வுக்கு வருகின்றனர்

அனைத்து கட்சியில் இருந்தும் தி.மு.க.,வுக்கு வருகின்றனர்

பெண்ணுரிமைக்கு போராடிய, ஈ.வெ.ரா.,வை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருக்காகவோ விமர்சித்து வருகிறார். அவரைத் தாண்டி அவருக்கு எஜமானர்கள் உள்ளனர். நேற்று வரை அவருக்கு தம்பியாக இருந்தவர்கள், ஈ.வெ.ரா., விமர்சனத்துக்குப் பின், அவரிடம் இருந்து விலகி தி.மு.க.,வுக்கு வந்து விட்டனர். கிருஷ்ணகிரியில் துவங்கி, தமிழகம் முழுதும் தி.மு.க.,வில் இணையும் படலம் தொடருகிறது. நாம் தமிழர் கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளில் இருந்தும் இளைஞர்கள் தி.மு.க.,வை நோக்கி வருகின்றனர். இண்டியா கூட்டணியை உருவாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இக்கூட்டணி பார்லிமென்ட் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்திலும் வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும். 200 தொகுதிகளில் வெற்றி என்பது கூடுதலாகி வருகிறது. சக்கரபாணி, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SAMANIYAN
ஜன 22, 2025 09:21

ஆமா..எல்லாரும் உங்களை தேடி தான் வருவார்கள்..ஏனெனில் இங்குதான் கொலை செய்தாலும் ,,கொள்ளை அடித்தாலும்,பாலியல் வன்கொடுமை செய்தாலும் , என்ன தப்பு செய்தாலும் தப்பித்து விடலாம்..நானும் விரைவில் உங்கள் கட்சியில் இணைவேன்..ஏதோ என்னால் முடிந்த சில தவர்களை செய்து சுகபோகமக வாழ்வேன் ..முட்டா பு மக்கள் கடைசிவரை நமக்கு அடிமையாய் கிடந்தே சாகட்டும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை