உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடியை எதிர்த்து உருவாகும் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அண்ணாமலை

மோடியை எதிர்த்து உருவாகும் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அண்ணாமலை

ரிஷிவந்தியம் : 'மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்குவது மட்டுமே தி.மு.க.,வின் சாதனையாக உள்ளது' என அண்ணாமலை பேசினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்த 'என் மண்; என் மக்கள்' பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்துார் ஆகிய 4 பெருநகரங்கள் தமிழகத்தின் உற்பத்தி திறனில் 32 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆனால், ரிஷிவந்தியம் போன்ற விவசாயம், கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வளர்ச்சி பெறாமலேயே உள்ளது.இங்குள்ள பிள்ளைகள் படித்து முடித்த பிறகு சென்னை, கோயம்புத்துார் போன்ற வேறு ஊருக்கும், வெளி நகரங்களுக்கும் சென்று பணிபுரிகின்றனர். வளர்ச்சி என்பது நம்மை தொட்டுக்கூட பார்க்கவில்லை.இதுவரை 167 தொகுதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளேன். அனைத்து தொகுதியின் தலைநகரும் தாலுகாவாக உள்ளது. ஆனால், ரிஷிவந்தியம் மட்டும்தான் தாலுகாவாக இல்லை. கடந்த தேர்தல் பரப்புரையில் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக மாற்றுவேன் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.ஆனால், ஆட்சிக்கு வந்தும் கூட ரிஷிவந்தியம் தாலுகா அந்தஸ்து பெறவில்லை. வரும் தேர்தலில் பா.ஜ., வுக்கு அதிகாரம் கிடைத்ததும் ரிஷிவந்தியம் தாலுகாவாக மாற்றப்படும். 10 ஆண்டு கால காங்., ஆட்சியில் 2ஜி, சுரங்கம், ெஹலிகாப்டர் என 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.குறிப்பாக, கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் உரத்தட்டுப்பாடு இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு உரத்தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இல்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 648 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 50 ஆயிரத்து 30 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 51 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக பைப் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்குவது மட்டுமே தி.மு.க., வின் சாதனையாக உள்ளது.'இண்டியா' கூட்டணியை ஆரம்பித்த பீகார் முதல்வர் நித்தீஷ்குமார் தற்போது, பா.ஜ.,வில் இணைந்து விட்டார். மோடியை எதிர்த்து உருவாகும் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். 2024 தேர்தலில் நாடு நன்றாக இருக்க பிரதமர் நரேந்திரமோடியை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

venugopal s
ஜன 30, 2024 16:49

மோடியையே வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை!


சந்திரன்,போத்தனூர்
ஜன 30, 2024 18:02

ஆமா மோடி பிரதமராக வாய்ப்பில்லை ஸ்டாலின் பிரதமராவது உறுதி.????????????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 19:48

உளறல் ..... ஜனநாயக விழிப்புணர்வு அற்ற, அரசியல் தெளிவு இல்லாத பெரும்பாலான மக்கள் சின்னத்தை வைத்துத்தான் வாக்களிக்கிறார்கள் .... பிரதமர் வேட்பாளர் யார் என்று பார்ப்பதில்ல்லை .... இளம் வாக்காளர்கள் ஓரளவு விதிவிலக்கானவர்கள் .....


அப்புசாமி
ஜன 30, 2024 16:26

ஆக மோடிய வெச்சி மற்றவங்க மஞ்சக்குளியுங்க.


கனோஜ் ஆங்ரே
ஜன 30, 2024 15:19

இந்த மாதிரி பேச்சையெல்லாம் தமிழ்நாட்டு மாநிலத்திற்கு வெளியே பேசிகொள்ளுங்க. அண்ணாமலை. இங்கே எந்த காலத்திலும், காவி உடையை தமிழக மக்கள் ஏற்பதே இல்லை. எல்லைச் சாமியான கருப்பணுக்கும், கருப்பசாமிக்கும், முனியாண்டிக்கும், அய்யனாருக்கும் கெடா வெட்டி பொங்க சோறு திங்குறவனுங்க தமிழ்நாட்டுக்காரனுங்க.. அத்துடன் மனிதர்களாய் வாழ்ந்து,மனிதருக்காக உயிர்நீத்த “நடுக்கல்”லை வணங்குறவனுங்க எங்க ஆளுங்க. அதுமட்டுமா, அரச மரத்தையும் வேப்பமரத்தையும் ஆலமரத்தையும் அத்துடன் கடலையையும், சூரியன் போன்ற இயற்கையை வணங்குபவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இங்கே இஸ்லாமியனும் ஒண்ணுதான், கிறிஸ்துவனும் ஒண்ணுதான். இதில் வேறுபாடு பார்க்க மாட்டானுங்க. தமிழ்நாடு என்பது ஆலமரம்... உங்க கட்சி என்பது முல்லைக் கொடி... ஆலமரம் தனித்து எழுந்து நின்று பிரம்மாண்டமாய் ஆயிரம் ஆண்டுகள் நிற்கும். முல்லைக் கொடியோ... தான் படர கொம்பை தேடும்.


கார்த்தி
ஜன 30, 2024 21:25

சரியான கூற்று. தமிழக மக்களுக்கு ஆன்மிகத்தையும் அரசியலையும் தனித்தனியாக பார்க்கும் திறன் மிக அதிகம்.


அபுசாமி
ஜன 30, 2024 11:49

கர்னாடகாவில் நல்லா தெரிஞ்சிதே.. மோடியை வெச்சு பேரணி, ஊரணின்னு உட்டும் ஒண்ணும் தேறலை. இத்தனைக்கும் அண்ணாமலை அங்கே தேர்தல் பொறுப்பாளர்.


Velan Iyengaar
ஜன 30, 2024 14:07

பொறுப்புல இருந்த இடத்துல எல்லாம் மண்ணை நல்ல கவ்வினங்களாம்


g.s,rajan
ஜன 30, 2024 11:40

Why Not....


அசோகன்
ஜன 30, 2024 11:15

மோடி சரியில்லை ஏனென்றால் அவர் திராவிடியா கட்சி போல் இதுவரை ஒரு சாராய ஆலையையும் கட்டவில்லை குடிநீரில் மலம் கலந்து கொடுக்கவில்லை பட்டியலினதவறை வீட்டு புகுந்து தினம் தினம் வெட்டவில்லை கற்பழிக்கவில்லை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்


duruvasar
ஜன 30, 2024 10:37

இதே போல் அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள அங்கிள், இந்து என்ற பெயரில் அலையும் முஸ்லீம், குணா, சீப்பு , இவர்களையும் மக்கள் ஒதுக்கி தள்ளுவார்கள்.


madhumohan
ஜன 30, 2024 08:49

யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் கவலையில்லை .......எங்கள் கூட்டணி EVM..உடன் மட்டும்தான்


Velan Iyengaar
ஜன 30, 2024 09:33

நெத்தியடி


Tamilselvan,kangeyam638701
ஜன 30, 2024 10:05

அறிவாலய முட்டாள்களே திமுக EVM மூலமாக அப்படி ஜெயித்துதான் ஆட்சியில் இருக்கிறதா?


KumaR
ஜன 30, 2024 10:35

apa pona electionla unga thiruttu themuka win pnunathu epadi evm la fraud paniya.. oru electionla kuda thaniya nika vakku ilatha kothadimai elm muttu kuduka vanthutanga..


ஆரூர் ரங்
ஜன 30, 2024 11:06

எந்த EVM????? ஸ்டாலின் ஜெயிச்ச அதே மிஷினா?


Velan Iyengaar
ஜன 30, 2024 14:10

நிலைய வித்துவானுக்கு இணையத்துல evm குறித்து எழுதப்பட்டுள்ள ஆய்வு கட்டுரை எல்லாம் கண்ணுக்கு தெரியாது மொத்த evm இல்லும் சூடு வெக்கமாட்டாங்க.. அப்போ தானே ஒரு நம்பகத்தன்மை வரும்


Sivak
ஜன 30, 2024 16:15

evm என்ன ஆட்டோ மீட்டாரா? சூடு வைக்க ?


Seshan Thirumaliruncholai
ஜன 30, 2024 08:34

அரசியல் ஒரு சூத்தாட்டம்போல். சகுனி வென்றான் எதிர் பக்கம் கிருஷ்ணன் இல்லை. வடமாநிலத்தில் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் ஆனால் தெற்குப்பகுதியில் மோடியை முன்னுறுத்தி வாக்கு கேட்கப்படாததால் சகுனி வெல்கிறான். பாரதத்தில் சூதாட்டத்தில் தர்மர் தோற்றதுபோல் தமிழக காலத்தில் ஏற்படாமல் இருக்க மோடி என்ற காயை உருட்டவேண்டும்


Velan Iyengaar
ஜன 30, 2024 10:32

சூத்தாட்டம் தான் அரசியல் பின்னாடி இருந்து நல்லா வேலை செய்பவனுக்கு தான் வாழ்வு


Velan Iyengaar
ஜன 30, 2024 10:33

நீங்க சொன்ன அரசியல் சூத்தாட்டம் கச்சிதமா பொருந்தும்


N.K
ஜன 30, 2024 13:04

சூதாட்டம்னு சொல்ல வர்றீங்களா? நான் தான் தப்பா படிச்சுட்டேனா


Velan Iyengaar
ஜன 30, 2024 08:16

இந்த வாய் மட்டும் இல்லேன்னா நாய் கவ்வ்விகிட்டு ஓடி போய்டும்


sridhar
ஜன 30, 2024 08:32

எங்கே ஓடிடும் , ஸ்பெயின் நாட்டுக்கா .


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ