வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்று சமூக சமூகத்தை கெடுக்கும் விளையாட்டுகளை நாம் வரவேற்போம். அப்புறம் உதட்டுடன் உதடு முத்தம், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடுத்து தூக்கிக் கொண்டு ஓடுதல்,..........
பெரம்பலுார்: பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் நடத்தப்பட்ட லெமன் ஸ்பூன் போட்டியில், பெரம்பலுார் கலெக்டர் முதலிடம் பிடித்தார்.பெரம்பலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று நடந்தது.இதில், ரங்கோலி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல். ஊசியில் நுால் கோர்த்தல் போன்ற விளையாட்டு போட்டிகளில் அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் ஒன்றான லெமன் ஸ்பூன் வாயில் எடுத்து செல்லுதல் போட்டியில், அரசு அலுவலர்களுடன் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் கலந்து கொண்டு, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். பின், போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின், காளை மாடுகள் பூட்டிய வண்டியில் கலெக்டர், பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்,ஏ., பிரபாகரன் ஆகியோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயணம் செய்தனர்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., வடிவேல் பிரபு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்று சமூக சமூகத்தை கெடுக்கும் விளையாட்டுகளை நாம் வரவேற்போம். அப்புறம் உதட்டுடன் உதடு முத்தம், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடுத்து தூக்கிக் கொண்டு ஓடுதல்,..........