உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டில் மது பாட்டில் படம்

ரேஷன் கார்டில் மது பாட்டில் படம்

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சின்னபூலாம்பட்டி தங்கவேல் 46. இவரது மனைவி ஜெயப்பிரியா. இவரது மனைவி ரேஷன் கார்டில் குடும்பத் தலைவராகவும், தங்கவேல் குடும்ப உறுப்பினராகவும் இவரது மகன், மகள் உறுப்பினராகவும் இருந்தனர். இந்நிலையில் இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து மகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து இ சேவை மையத்தில் நீக்கம் செய்தார். தங்கவேல் கூறியதாவது: கடந்த வாரம் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக எனது மனைவி சென்றார். அப்போது ரேஷன் கார்டில் மகள் பெயர் நீக்கமாகியும், எனது மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோவும் இருந்திருக்கிறது. நாங்கள் இன்னும் அப்டேட் செய்யப்பட்ட கார்டை வாங்கவில்லை. ஆனால் இ-கார்டில் இப்படி மதுபாட்டில் படம் இருந்துள்ளது. அதனை பார்த்து நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பினர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

BALAKRISHNAN SUNDARAVARADHAN
ஆக 28, 2025 22:54

வேதனை மக்களை அலைகழிக்கும் அரசு சேவை பணியில் இருப்பவர்கள் அதர்மம் செய்யும் பட்சத்தில் இயற்கை பிரபஞ்சம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ஏனென்றால் அரசாங்கங்கள் தண்டனை என்றும் வழங்க போவதில்லை


S.jayaram
ஆக 26, 2025 16:32

டாஸ்மாக் ஆட்சியில் மதுபாட்டில் படம் தான் வரும். நல்லாட்சிக்கு ஓட்டு போட்டால் உங்கள் புகைப்படம் வரும்


Kangai Amaran
ஆக 27, 2025 11:15

Go back


Ramesh Sargam
ஆக 26, 2025 02:27

திருட்டு திமுக ஆட்சியில் எல்லாம் நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை