உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாருக்கு வங்கிகளை தாரை வார்க்க திட்டம்

தனியாருக்கு வங்கிகளை தாரை வார்க்க திட்டம்

'வங்கிகளை தேசிய மயமாக்கியது, எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை; நோக்கங்கள் முழுமையாக எட்டப்படவில்லை; வங்கிகளை தனியார் மயமாக்குவது தேச நலனை பாதிக்காது' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா, கடந்த 1969-ல், 14 வங்கிகளை, தேசியமயமாக்க எடுத்த முயற்சிகளை, நாட்டு மக்கள் நன்கு அறிவர். கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே தவிர, தனியார் வங்கிகள் அல்ல. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை குறைத்து பேசுவது, தனியார் துறைக்கு தாரை வார்க்கும் திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது. - செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

திகழ் ஓவியன்
நவ 07, 2025 11:28

உமக்கும் வங்கிக்கும் என்ன சம்பந்தம்...அடியாள் எல்லாம் பொருளாதாரதை பேசலாமா? பேசாமல் எல்லா வங்கியிலும் ஜாதி வெறி இருக்கும் என koluthi போடு. உமக்கு அது கை வந்த கலை


veeramani
நவ 07, 2025 09:36

ஏம்பா .இந்திய எகனாமிக்ஸ் தெரியுமா அல்லது பேங்க் செயல்பாடு புரியுமா எதெற்கு எடுத்தாலும் மய்ய அரசை குறைகூறுவது நல்லதில்லை. சிதம்பரம் காலத்தில் அனைவருக்கும் கல்விக்கடன் என முழங்கினீர் அந்த ப ணம் திரும்ப பெறப்பட்டதா காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் நடந்த ஊழல் பற்றி பல புத்தகங்கள் போடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை