உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,

தனிக்கட்சி தொடங்க திட்டமா? செப்., 4ல் அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தர்மயுத்தம், சட்டப்போராட்டத்தை எதற்காக நாம் கையில் எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் தான் நாம் உயிர்மூச்சு இருக்கும் வரையில் பயணிப்போம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kyhfu34t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசியல் ரீதியான கட்சிகளுக்கு, அதை சார்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால்,பொதுமக்களின் நன்மதிப்பை எந்த கட்சியின் தலைவர் பெறுகிறாரோ, அவர் தான் ஆளுகின்ற உரிமையை பெற முடியும். அதைத் தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா செய்தார்கள்.அந்த வரலாற்றை மீண்டும் நாம் உருவாக்கிடவே, இந்த தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். அதற்கு முழுவடிவம் கொடுப்பதற்காக உங்களின் கருத்துக்களை கேட்டு அறிந்து, தற்போது ஒரு முடிவை எடுத்து இருக்கிறோம். சில முடிவுகள் வெளியே முடியாது. சில முடிவுகளை வெளியே சொல்ல வேண்டி இருக்கும். அது என்ன என்பது உங்களுக்கு தெரியும். அதை எல்லாம் எங்களைப் போல நீங்களும் உள்வாங்கி கொள்ள வேண்டும். மதுரையில் செப்டம்பர் 4ம் தேதி மாநாடு நடத்தப்படும். அதில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். 2 ஆண்டு காலம் எவ்வளவோ கடினமான சூழ்நிலைகள் வந்தன. இருந்தாலும், எங்களின் சக்தியையும், திறமையையும் வெளிக்காட்டவே, ராமநாதபுரம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டோம். அந்தத் தேர்தலின் நமக்கு விழுந்த ஓட்டுக்களின் மூலம், மக்களின் ஆதரவு நமக்கு தான் இருக்கிறது என்பது வெளிப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chandran
ஜூலை 14, 2025 20:22

Super hair dye boss. White hair around the ears and rest jet black


M Ramachandran
ஜூலை 14, 2025 16:35

ஊர்ந்து சென்று கொத்தடிமை யாகி பின்னர் த்ரோஆகியாகவும் ஆன பழனிச்சாமியம் இந்த ஆளும் உபயோக்கமற்ற ஜந்துக்கள். இதெல்லம்மாக்கல்லைய்ய பற்றி கவலையய் படாது சொந்த நலனுக்கு எந்த வேலையையும் செயயும் முன்னது த்ரோகம் செய்ய தயாங்காது.. நம் தலைவிதி இருப்பதும் திருட்டு கும்பல் இதுவும் அதற்கு சலைத்தது அல்ல. முன்னது திருடி தின்னு இப்போர் அஜீரணத்தால் வலி தாங்கிக முடியாமல் பிரெண்டு கொண்டிருக்கு


V Venkatachalam
ஜூலை 14, 2025 15:45

இப்பதான் மோடிஜி சொன்னார்கள்.எங்கள் நாட்டில் 2500 கட்சிகள் இருக்கின்றன.‌அதனால் ஜனநாயகம் வலிமையாக இருக்கிறது. அதனால் நம்ம ஓபிஎஸ் அண்ணா அவர்கள் 2501 வது கட்சியாக ஒரு கட்சி தொடங்கி ஜனநாயகத்தை மேலும் வலிமையாக்க போகிறார்... அது சரி.. இவர் அண்ணா திமுக ஆஃபீஸ் ல் இருந்து அங்கே இருந்த டாகுமெண்டையெல்லாம் திருடிக்கொண்டு போனாரே, அப்போது ஜனநாயகம் வலிமை இழந்து இருந்ததா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை