உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: 94.56% பேர் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது: 94.56% பேர் தேர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவித்தபடி, இன்று(மே 6) காலை வெளியானது. இணையதளத்திலும், எஸ்.எம்.எஸ்., வழியாகவும், மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 92.37 சதவீதம் பேரும் மாணவிகள் 96.44 சவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4cbfv0wh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:

மாணவிகளே கூடுதல் தேர்ச்சி

தேர்வு எழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.37 % , மாணவிகள் 96.44 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91. 32 சதவீத தேர்ச்சி கிட்டியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 97.45 சதவீதம் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச், 1ல் துவங்கிய பொதுத்தேர்வு, மார்ச் 22ல் முடிந்தது. மாநிலம் முழுதும், 3,302 தேர்வு மையங்களில், தேர்வு நடந்தது. இதில், 7,534 பள்ளிகளை சேர்ந்த, 7.72 லட்சம் மாணவர்கள்; 21,875 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 12,000 பேர் தேர்வு எழுதவில்லை.பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. ஏப்.,1ல் துவங்கிய விடைத்தாள் திருத்தப் பணிகள், ஏப்.,13ல் நிறைவு பெற்றன. மதிப்பெண் ஆய்வு, பகுப்பாய்வு பணிகள், ஏப்., 30க்குள் முடிந்தன. இதையடுத்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த ஆண்டு மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை, http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., வழியே மதிப்பெண் விபரங்கள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

G Mahalingam
மே 06, 2024 11:08

இப்போது சதவீதம் தேர்ச்சி பெற்றும் சதவீதம் மாணவருக்கு பொது அறிவு உள்ள கேள்விகள் தெரியாது


GoK
மே 06, 2024 10:26

இந்த தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர் கூட தமிழகத்தை ஆளும் குடும்பத்தினரைவிட சிறந்தவர்களே அவர்கள்தான் எந்த தகுதியுமில்லாமல் குண்டு சட்டியில் குதிரை ஒட்டி ஆட்சி செய்வதில் கில்லாடிகள்


Vathsan
மே 06, 2024 10:53

தவறு இந்தியாவை ஆளும் குடும்பத்தினரை விட உயர்ந்தவர்கள்


KrishnaKumar
மே 06, 2024 11:14

sir i dont know why u poke the ruling party into all these things, just wish the kids who have done well and support morally to those who doesnt score well


SUBBU,MADURAI
மே 06, 2024 07:12

இன்று ரிசல்ட் வெளியாகும் பட்சத்தில் அதில் தோல்வியுறும் மாணவ, மாணவிகள் தற்கொலை போன்ற தவறான பாதையை தேர்ந்தெடுத்து விடாமல் தடுக்க நம் தினமலரில் அவர்களுக்காக ஹெல்ப் லைன் நம்பரை வெளியிட்டால் நிறைய பேர் தவறான எண்ணத்தில் தற்கொலையில் ஈடுபடுவர்களை காப்பாற்றலாம்.


சாந்தகுமார்,ராணிப்பேட்டை
மே 06, 2024 06:50

பக்கி பயபுள்ளைகளா ஃபெயிலா போனாலும் பரவாயில்ல அடுத்த மாதம் தேர்வெழுதி பாஸ் பண்ணி விடலாம் அதை விட்டு கிறுக்குத் தனமான முடிவு எதுவும் எடுத்துறாதீங்க. அப்படி ஏதும் முடிவு செஞ்சிங்கன்னா அதுக்கு முன்னாடி இந்த நம்பர்ல கூப்பிட்டு பேசிட்டு அதுக்கப்றம் உங்க முடிவை எடுங்க 044-24640050, 9152987821


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை