உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எம்., கிஷான் கவுரவ ஊக்கத்தொகை உயருமா?

பி.எம்., கிஷான் கவுரவ ஊக்கத்தொகை உயருமா?

திருப்பூர் : பி.எம்., கிஷான் கவுரவ ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து விவசாய அமைப்பினர் கூறியதாவது:தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். பாமாயில் இறக்குமதி அதிகரிப்பும் இதற்கு காரணம். 'பாமாயில் இறக்குமதிக்கு வரி உயர்த்த வேண்டும்; அதன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். இதுதொடர்பான அறிவிப்பு, இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கிறோம்.பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய், மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.இத்திட்டத்தில் ஒவ்வொரு தவணை தொகை பெறுவதற்கு முன்பும், பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயி, தங்கள் நிலத்தை விற்று விட்டால், அவர் ஊக்கத்தொகை பெறும் தகுதியை இழப்பார். பயனாளி இறந்துவிட்டால், அவரது வாரிசு பெயரில் நில உரிமை மாற்றப்பட வேண்டும். இதுபோன்ற விவரங்களை, விவசாயிகள் 'அப்டேட்' செய்ய வேண்டும். வங்கிக்கணக்கு எண்ணுடன், ஆதார் எண், மொபைல் எண் இணைக்கப்பட வேண்டும்.இதை, வேளாண் துறையில் உள்ள கள அலுவலர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமித்தால் திட்டத்தின் பயன், நுாறு சதவீதம் விவசாயிகளை சென்றடையும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை