மேலும் செய்திகள்
என் மகன் பெயர் ஜீசஸ்; கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு இளவரசர் பேச்சு
1 hour(s) ago | 21
மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்
4 hour(s) ago | 10
சென்னை: பிரதமர் மோடி வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை கூறினார்.பார்லிமென்ட் பொதுதேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச துவங்கி உள்ளன. இதனிடையே தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரிலான யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாள் பயணமாக இன்று (19 ம் தேதி) சென்னை வந்தார். சென்னையில் துவங்கிய கேலோ விளையாட்டு போட்டியையும் துவக்கிவைத்தார். தொடர்ந்து திருச்சி மற்றும் ராமேஸ்வரத்திற்கும் பயணம் மேற்கொள்கிறார் மோடி.இதனிடையே தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலையின் பயணம் வரும் பிப்ரவரி மாதம் 2-வாரத்தில் நிறைவடைய உள்ளது. நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாமலை கூறுகையில் பிப். 2-வது வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. வரும் 25-ம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுடன் கானொலியில் உரையாற்றுகிறார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
1 hour(s) ago | 21
4 hour(s) ago | 10