உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் நாளை பிரதமர் மோடிரோடு ஷோ

கோவையில் நாளை பிரதமர் மோடிரோடு ஷோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : லோக்சபா தேர்தலையொட்டி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, நாளை (மார்ச் 18) கோவை வருகிறார். இதற்காக அவர், கர்நாடக மாநிலம், ஷிமோகா விமான நிலையத்தில் இருந்து மாலை, 4:35 மணிக்கு புறப்பட்டு, தனி விமானத்தில் கோவை விமான நிலையத்தை, 5:30 மணிக்கு வந்தடைகிறார்.அங்கிருந்து, 5:35 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக, 5:45 மணிக்கு ரோடு ஷோ துவங்கும் இடமான சாய்பாபா கோவில் கங்கா மருத்துவமனை பகுதியை வந்தடைகிறார்.அங்கு துவங்கும் ரோடு ஷோ, 6:45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் பகுதியில் நிறைவடைகிறது. அங்கிருந்து, 6:50க்கு புறப்படும் பிரதமர், ரோடு வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையை, 7:05 மணிக்கு அடைகிறார். அங்கு இரவு ஓய்வெடுக்கிறார்.மறுநாள் காலை, 9:30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக, 9:40 மணிக்கு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார்.விமான நிலையத்தில் இருந்து, 9:45 மணிக்கு புறப்பட்டு ஹெலிகாப்டரில், 10:15 மணிக்கு கேரள மாநிலம், பாலக்காட்டை சென்றடைகிறார்.பிரதமர் மோடி வருகையையொட்டி, விமான நிலையத்தில் இருந்து, ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை, 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நேற்று, பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து, மாநகர போலீஸ் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் பிரதமர் மோடி வந்து செல்லும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் மோடி இரவு தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.அரசு விருந்தினர் மாளிகை பகுதி முழுதும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுதும், பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மேட்டுப் பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், எரு கம்பெனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார், 3.3 கி.மீ., துாரம் நடக்கவிருந்த, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால், 2 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம், எரு கம்பெனியில் துவங்க இருந்த ரோடு ஷோ, சாய்பாபா கோவில் அருகே துவங்க உள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, கோவை மாநகரில் வழக்கமாக ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து, 19ம் தேதி வரை துடியலுார், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அந்த பகுதிகள் 'ரெட் ஜோன்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

varatha rajan
மார் 18, 2024 01:18

மழைக்கு வரலை..ஆனா வாக்கு வேனும் வாரம் இரண்டு முறை வரார்...நாம என்ன லூசா...


venugopal s
மார் 17, 2024 19:51

பிரதமர் மோடி அவர்கள் இங்கு வந்து அங்கப் பிரதட்சணம் செய்து காவடி எடுத்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!


C.SRIRAM
மார் 17, 2024 21:18

உங்க கிட்ட சொன்னது யார் ?


கர்ணன் கர்மபுரம்
மார் 17, 2024 19:15

அவர் நல்லாட்சி செய்திருந்தால் ரோடுக்கு வரவேண்டிய அவசியமேயில்லை. மக்கள் அவர் கேட்காமலேயே ஓட்டுப்போடுவார்கள். இப்படி ரோடுக்கு வந்து கதர வேண்டியதில்லை


C.SRIRAM
மார் 17, 2024 21:28

நல்லாட்சி என்றால் என்ன ? அவர் என்ன நல்லாட்சி செய்யவில்லை ?. கருத்து என்கிற பெயரில் உளறக்கூடாது . பிரச்சாரம் என்றால் கதறல்?. தமிழ் கூட தெரியவில்லையோ ?


வல்லரசு
மார் 17, 2024 15:42

மோடினு சொன்னாலே சும்மா அதிருது ஓரே ரோடுதா ஷோதான் என்சாய்தான்


J.Isaac
மார் 17, 2024 14:39

ஷோ தானே. எத்தனை காலம் தான் ஏமாற்றமுடியும்..


suresh
மார் 17, 2024 15:11

திராவிட மாடல்லே தான் ஏமாற்ற வேண்டும் மற்றவர்களையும் எண்ணுகிறார்


Oviya Vijay
மார் 17, 2024 13:43

இங்கும் அங்கும் உலாவிக் கொண்டும் கதறிக் கொண்டும்... காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி...


sankar
மார் 17, 2024 17:37

தேர்தலுக்கு பின் நாற்பதும் இழந்து பரிதவித்து - இங்கும் அங்கும் ஓடப்போகிறது திமுக & கோ


bal
மார் 17, 2024 12:45

நீங்க உங்க நேரத்தை தமிழ் நாட்டுக்கு வந்து வீணடிக்காதீர்கள்... இவர்கள் குவாட்டர், பிரியாணி, துட்டு, ஓசி பஸ் மற்றும் பொய்களுக்குத்தான் வோட்டு போடும் அடிமைகள்..ப்ரமாணங்க வோட்டு போட வரவே மாட்டானுக..


Saai Sundharamurthy AVK
மார் 17, 2024 12:14

அடுத்த பிரதமராக வரும் ஜூன் மாதம் பதவியேற்கும் திரு.மோடிஜி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஜெய் மோடிஜி ????????????


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 11:41

ஐயோ பாவம், இவரும் நடந்து பார்க்கிறார், உருண்டு பார்க்கிறார், ஆனால் தமிழ்நாட்டில் பருப்பு வேகவே இல்லையாம். இது பெரியார் மண். பக்திக்கும் அரசியலுக்கும் அறிவியலுக்கும் நன்கு வித்தியாசம் தெரிந்தவர்கள். உருட்டுகள் எல்லாம் உழன்று தான் போகும்.


suresh
மார் 17, 2024 12:44

மோடி நடந்து பார்க்கிறார் சரி , தீய முகவினர் தான் உருண்டும் , பிரெண்டும் , உருட்டியும், சுருட்டியும் பார்க்கிறார்களே ? அது ஏன் ?ஓகோ அவர்கள் தான் ராமசாமி நாயக்கர் வேண்டிய மூடர்களோ ? இல்லை அவர்கள் தான் பெரியாரின் மண் ஆயிற்றே , மனிதர்கள் இல்லையே ?


bal
மார் 17, 2024 12:47

ஆமாம் அறுபது வயது கிழவன் பதினாறு வயது பெண்ணை கல்யாணம்..ஓசி ட்ரைனில் வருபவன்..மூணு பொண்டாட்டிக்காரன்..மேலே குவாட்டர் பிரியாணி துட்டு ஓசி பஸ் மற்றும் பொய்களுக்கு தான் டுமீள்கள் வோட்டு போடும்.


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 13:52

இதையே இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் சொல்லுவீர்கள். புதுசா ஏதாவது உருட்டுங்க. போர் அடிக்கிது.


Sathyasekaren Sathyanarayanana
மார் 17, 2024 19:01

செந்தமிழ் கார்த்திக் நீங்க இன்னும் பதினைந்து லட்சம் என்ற பொய்யை உருட்டுகிறீர்கள் அவர் பால் அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்.


முருகன்
மார் 17, 2024 11:23

மக்கள் இது வரை வரதாவர் இப்போது வருவதின் நோக்கம் தெரிந்து ஓட்டு போட மாட்டார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை