உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., நிர்வாகிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

பா.ம.க., நிர்வாகிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

சென்னை: பா.ம.க., நிர்வாகிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க., சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் சந்தோஷ்குமாரை, பாபு என்ற நபர் கூலிப்படையை வைத்து கடத்திச் சென்று தாக்கியுள்ளார். அவரது மொபைல் போனை பறித்து, அதிலிருந்து பா.ம.க., சமூக ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பா.ம.க., சார்பில் சமூக ஊடக பணி செய்பவர்களை, ஒரு கூட்டம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அச்சுறுத்தல் உள்ள பா.ம.க., நிர்வாகிகளுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை