உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., முக்கிய நிர்வாகி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க., முக்கிய நிர்வாகி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பா.ம.க., வக்கீல்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பதவியில் இருந்து பாலுவை நீக்கி உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.வழக்கறிஞர் பாலு, பா.ம.க.,வின் வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தலைவராக பதவி வகித்து வந்தார். பிரபல வழக்குகள் பலவற்றை நடத்தி வருகிறார். கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவர்.தற்போது பாலுவிற்கு பதிலாக வக்கீல் வி.எஸ்.கோபு, சமூகநீதி பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளைராமதாஸ் நீக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே தற்போது பாலு நீக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naadodi
ஜூன் 10, 2025 23:47

முக்கினத்துக்கு கூடவா கட்சி நிர்வாகியை நீக்குவாக?


தஞ்சை மன்னர்
ஜூன் 10, 2025 21:20

மகன் போட்டு கொடுக்க போட்டு கொடுக்க ஒவ்வொருத்தராக தங்களுக்கு எதிரான எதிரியை நீக்கம் நடைபெறுகின்றது இது தெரியாமல்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 10, 2025 20:16

எதோ ஒரு ஞாபகத்துல ராமதாஸை நீக்கிப்புடப்போறீங்க, ஜாக்கிரதை


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 10, 2025 17:20

இப்படி தினம் ஒருவர் இருவர் என நீக்குவதற்குப் பதிலாக பகுத்தறிவுப்படி நல்ல முகூர்த்த நாளா பாத்து சுப யோக சுப தினத்தில் கட்சியையே நீக்கிடலாமே .மரங்களாச்சும் பொழச்சுக்கும்


Tiruchanur
ஜூன் 10, 2025 17:19

நிர்பந்தத்துக்கு அன்புமணி தள்ளப்படுவார் போல


பாரத புதல்வன்
ஜூன் 10, 2025 17:06

விரைவில் தன்னையே நீக்கி உத்தரவிடுவார் மரம் வெட்டி லபக்கு தாஸ்.


Pradeep Kumar
ஜூன் 10, 2025 16:10

நான் கூட அன்புமணியை நீக்கிட்டாங்களோனு நெனைச்சேன்.