உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காடுவெட்டி குரு படத்தை பயன்படுத்தி வன்னியர்களை திரட்டும் பா.ம.க.,

காடுவெட்டி குரு படத்தை பயன்படுத்தி வன்னியர்களை திரட்டும் பா.ம.க.,

சென்னை:வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் படம், அவர் பேசிய வீடியோவை பயன்படுத்தி, வன்னியர் சங்க மாநாட்டுக்கு, பா.ம.க.,வினர் ஆள் திரட்டி வருகின்றனர்.மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு மாநாட்டை நடத்தி வந்த பா.ம.க.,வும், வன்னியர் சங்கமும், நீண்ட இடைவெளிக்கு பின், வரும் 23ம் தேதி, கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்துகின்றன.சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால், கும்பகோணம் மாநாட்டில் அதிக கூட்டத்தை கூட்டி, தங்கள் பலத்தை காட்ட பா.ம.க., தயாராகி வருகிறது. மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கும்போது, வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு, கிராமம் கிராமமாக சென்று, வன்னியர்களை திரட்டுவார்.அவரது மறைவுக்கு பின், வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. அதனால், கும்பகோணம் மாநாட்டுக்கு காடுவெட்டி குருவின் படம், அவர் பேசிய வீடியோக்களை பயன்படுத்தி, பா.ம.க.,வினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.'வீர வன்னிய மகாராஜன் வழிவந்தவர்கள் வன்னியர்கள்' என்ற வரலாற்றை சொல்லி பேசுவது, காடுவெட்டி குருவின் வழக்கம். வீர வன்னிய மகாராஜன் பற்றி, குரு பேசும் வீடியோவை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 'அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பிறந்தவன் வன்னியர்' என, குரு பேசும் வீடியோக்களை, பா.ம.க.,வினர் பகிர்ந்து வருகின்றனர்.குருவின் மகன் கனலரசன், பா.ம.க.,வுக்கு எதிராக வேகமாக பேசி வரும் நிலையில், குருவின் படம், வீடியோக்களை பயன்படுத்தி, பா.ம.க.,வினர் ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை