உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்

வரும் டிச., 17ல் பா.ம.க., சிறை நிரப்பும் போராட்டம்

'வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, வரும் டிசம்பர் 17ல், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, 1,267 நாட்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க, தி.மு.க., அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பா.ம.க., நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், தி.மு.க., அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான், சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுததத்தை கையில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல், ஒருபோதும் பா.ம.க., ஓயாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க., அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 17ம் தேதி காலை, மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை