உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்ததால் பிரதமரின் மதிப்பு உயர்ந்துள்ளது: அண்ணாமலை

தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்ததால் பிரதமரின் மதிப்பு உயர்ந்துள்ளது: அண்ணாமலை

பழனி : ''தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்ததால் பிரதமர் மோடியின் மதிப்பு உயர்ந்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பழனி கோவிலில் தரிசனம் செய்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும். போலீசார் தங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக காலணி அணியாமல் வேள்வி துவங்கி 48 நாட்கள் நிறைவடைந்தன; தைப்பூச நாளில் ஒரு மண்டலம் முடிந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m20q51du&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மதிப்பு உயர்ந்துள்ளது

எங்கள் குடும்பத்தின் காவடி எடுத்து வந்து பழநி முருகனை தரிசனம் செய்துள்ளேன். நாளை முதல் 48 நாட்கள் நிறைவடைந்த பின் திருப்பரங்குன்றத்திற்கு செல்ல உள்ளேன். இங்கு படிகளில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 15 கி.மீட்டருக்கு ஒரு கழிப்பறை வசதி அரசு அமைத்து தர வேண்டும்.பிரதமர் மோடி பிரான்சில் இருந்து தைப்பூசத்திற்கு, 'கந்தனுக்கு அரோகரா' என உள் உணர்வோடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் அவரின் மதிப்பு உயர்ந்துள்ளது.விஜய், பிரசாந்த் கிஷோர் என யாரை சந்தித்தாலும், நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். 'ஏசி' அறையில் அரசியல் வல்லுனர்களின் கருத்துக்களுக்கு செயல்படுவதில்லை. 'என் மண் என் மக்கள்' யாத்திரை போல மக்களை சந்திக்க யாத்திரை செல்ல வேண்டும்.முதல்வர் ஸ்டாலின், மக்களை நேரடியாக சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க.,வில் நடைபெறுவது உட்கட்சி பிரச்னை. 'தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை வேறு மாநிலத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது' என முதல்வர் கூறியது பச்சை பொய்.அரசியலில் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்களை சட்டப்படி பயன்படுத்தக் கூடாது. ஆனால் த.வெ.க.,வில் சிறார் அணி அமைத்துள்ளதாக கூறுவதில் யாரை நியமிப்பர் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

venugopal s
பிப் 12, 2025 17:52

அந்த சாட்டையடி திருவிழாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் உங்கள் மதிப்பு ரொம்பவே தாழ்ந்து போய் விட்டது என்பது தெரியுமா?


பேசும் தமிழன்
பிப் 12, 2025 18:13

நீங்கள் எல்லாம் பேசுகிறீர்கள் என்றால்.... கண்டிப்பாக அவரது மதிப்பு உயர்ந்து தான் இருக்கும்.... முன்பெல்லாம் இந்துக்களின் போராட்டம் எப்படி இருக்கும்..... இப்போது எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்த்தாலே தெரியும்.... அண்ணாமலை புகழ் கூடியிருக்கிறதா இல்லை குறைந்து இருக்கிறதா என்று தெரியும்.... நீங்கள் புதிதாக கம்பி கட்ட வேண்டாம்.


vivek
பிப் 12, 2025 18:17

அப்படியில்லயே.... பெரியார் எனும் பிம்பம் தான் பொடிந்து போனது என்று மக்கள் கூறுகின்றனர்


Varuvel Devadas
பிப் 12, 2025 15:51

It seems, that Mr. Annamalai turns into a comedian.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 12, 2025 13:36

அண்ணாமலை எவ்வளவோ மேல்


MANIMARAN R
பிப் 12, 2025 13:22

மக்களுக்கு மிகப்பெரிய சேவையை செய்து விட்டார்கள் நன்றி


madhes
பிப் 12, 2025 11:22

கைலாசம் கைலாசம் உன்னமாதிரிங்க மோடிக்கு முட்டு குடுக்காம தமிழகத்துக்கு நல்ல திட்டமா குடுக்க சொல்லுங்க, தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களை பராமரிக்க கூட காசு கொடுப்பதில்லை, உதாரணம் காவடி சென்ட்ரல் வாட்டர் போர்ட் கமிஷன் ஆபீஸ், அங்க பொய் பாரு கைலாசம்,


கைலாசம்
பிப் 12, 2025 12:24

madesh, உன்ன மாதிரி யாருக்கும் முட்டு கொடுக்கவில்லை. மத்திய அரசு, சென்ட்ரல் water Board commission ஐ சரியாக கவனிப்பது இல்லை என்பதை நீ பார்த்தாயா madesh. மேலும் CWC என்பது பொது. காவேரி நதிக்கு மட்டுமல்ல. காவேரி நதி tribunal என்ன சொல்கிறது அதை செயல் படுத்த வேண்டியது CWC மற்றும் நதி சார்ந்த மாநிலங்களின் கடமை. எதுவும் முழுமையாக தெரியாமல் நீ முட்டு கொடுக்காதே madesh.


guna
பிப் 12, 2025 14:38

முரசொலி மட்டும் படிப்பவர் போல.....என்ன செய்வது...திராவிடம் இவர்களை நம்பித்தான் ஓடுது


Barakat Ali
பிப் 12, 2025 10:50

தமிழக பாஜகவுக்கு வெத்துவேட்டு அல்லாத, சீரியஸான ஒரு புதிய தலீவரை மோடி நியமிச்சா அவர் மதிப்பு இன்னும் உயரும் .....


பேசும் தமிழன்
பிப் 12, 2025 18:16

ஏன் அண்ணாமலை அவர்கள் தலைவராக இருப்பதால்..... உங்கள் அடிவயிறு கலக்குகிறதா ???.... தமிழகத்தில் முன்பு பாஜக எப்படி இருந்தது.... இப்போது எப்படி இருக்கிறது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.


Narayanan Muthu
பிப் 12, 2025 10:29

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமரின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் குறையத்தான் செய்யும். ஏனெனில் அவரின் தமிழ்நாட்டிற்க்கான அர்ப்பணிப்பு அப்படி. அதிகரிக்க வாய்ப்பே இல்லை. புயல் நிவாரணம் வெள்ள நிவாரணம் வரி பகிர்ந்தளிப்பு இவைகளே சாட்சி.


அப்பாவி
பிப் 12, 2025 09:43

முருகனுக்கு காவடி எடுத்தால் புண்ணியம் கிடைக்கும். ஜீ க்கு காவடி எடுத்தால் பதவி கிடைக்கும்.


முருகன்
பிப் 12, 2025 09:34

வாழ்த்து மட்டுமே கிடைக்கும்


madhes
பிப் 12, 2025 08:28

அடேய் இத்தனை நாளா தமிழ்நாட்டுக்கு மோடி என்ன செய்தார்னு எல்லாம் தெரியும், முருகன், ஐயப்பன் னு நீங்க பொய் பேசி நாடகம் போடுவது தெரியும், அண்ணாமலை போன்ற பித்தலாட்டக்கனை தமிழகம் ஒருபோதும் நம்பாது,


கைலாசம்
பிப் 12, 2025 09:50

கரூர் காரர் யாரை திருப்திப்படுத்த பிரதமரையும் அண்ணாமலையையும் இப்படி கேவலமா பேசுகிறார். மோடியை அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர். சரி நீதான் சொல்லேன், பிரதமர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்யவில்லை என்று.


Madras Madra
பிப் 12, 2025 11:54

11 மருத்துவ கல்லூரி எந்த ஆட்சியாளன் 60 வருஷத்துல வாரி தமிழகத்துக்கு குடுத்தான் சொல்லு செய் நன்றி கொன்ற மகர் இன்னும் எவ்வளவோ சொல்லலாம் திமுக எனினும் தீய சக்தியை அடக்கி வைத்திருப்பதே பெரிய சேவை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை