உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மர்மங்களை மறைக்க போலீஸ் துடிக்கிறது

மர்மங்களை மறைக்க போலீஸ் துடிக்கிறது

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காவல் துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது, இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காவல் துறையினர் நினைத்திருந்தால், கரூரில் விஜய் கூட்டத்திற்கு பெரிய இடத்தை ஒதுக்கியிருக்கலாம். கூட்டம் நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்தது போன்று, சில சதிகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. இது உண்மையா என்பது விசாரணையில்தான் தெரிய வரும். எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி