உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோட்டை நோக்கி சென்ற துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்

கோட்டை நோக்கி சென்ற துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பழைய முறைப்படியே, மாநகராட்சி வழியாக துாய்மை பணி வழங்க வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்ற, துாய்மை பணியாளர்கள் 900 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ராயபுரம், திரு.வி.நகர் மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம், சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், தங்களுக்கு துாய்மை பணி வழங்க வேண்டும் எனக்கோரி, துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், அம்பத்துாரில் 42வது நாளாக, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், முதல்வரிடம் மனு அளிக்க, கோட்டையை நோக்கி பேரணி செல்லப்போவதாக, துாய்மை பணியாளர்கள் அறிவித்தனர். நேற்று காலை பிராட்வே, என்.எஸ்.சி., போஸ் சாலையில், குறளகம் அருகே, 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால், 300க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். பேரணி செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். உடனே, துாய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, சில பெண்கள் கையில் பிளேடை வைத்துக் கொண்டு, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வோம் என, மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, பலரையும் குண்டுக்கட்டாக துாக்கி, பஸ்களில் ஏற்றிச்சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.துாய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே, கடந்த டிச., 5ல், துாய்மை பணியாளர்கள், இதேபோல் கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்று, 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

கெஞ்சி, கூத்தாடிய போலீசார்

சென்னை பாரிமுனையில் கைதான துாய்மை பணியாளர்களில், 40 பெண்கள் உள்ளிட்ட 45 பேர், ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்க, பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர். வேளச்சேரி - -பரங்கிமலை உள்வட்ட சாலையில், ஆண் துாய்மைப் பணியாளர் சிலர், 'பேருந்தை நிறுத்துங்கள்; மிக அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும்' என்றனர். வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது, வாகனத்தில் இருந்தவர்கள் கீழே இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு போலீசாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. ஆதம்பாக்கம் போலீசார் வந்து சமரச பேச்சு நடத்தி, பேருந்தில் ஏற்றிச் சென்றனர். மதியம் உணவு வழங்கியபோது, அதை துாய்மை பணியாளர்கள் ஏற்க மறுத்தனர். போலீசார் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி சாப்பிட வைத்தனர். பின், நேற்று இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அரசு பேச்சு நடத்தி தீர்வு காணணும்!

துாய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து வரும், உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி அளித்த பேட்டி: துாய்மை பணியாளர்கள் 149 நாட்களாக போராடியும், அரசு அழைத்து பேச்சு நடத்தவில்லை. ஆனால், போராட்டம் நடத்திய செவிலியர்கள் 1,000 பேரில், 169 பேருக்கு பணி நிரந்தரம் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள செவிலியர்களுக்கும், அறநிலைத்துறையில், 1,500 பேருக்கும் ஜனவரிக்குள் பணி நிரந்தரம் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு முன், எங்களை அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும். இல்லையேல், முதல்வர், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் வீடுகளுக்கு பேரணியாக சென்று மனு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Palanisamy Sekar
டிச 28, 2025 07:36

பகட்டுக்காக அரசு நடத்துகின்றார் ஸ்டாலின். ஆசிரியர்களுக்கு சம்பளம் சரியான நேரத்தில் கொடுக்க கஜானாவில் பணமே இல்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் விரைவில் காலியாகிடும் என்கிறார்கள். வாங்கிய உலகவங்கி கடனுக்கு வட்டிக் கட்டக் கூட பணமே இல்லை என்கிறார்கள்.ஆனாலும் கட்சி மீட்டிங் அரசு பொது விழாக்களில் பணம் தண்ணீராக பாய்கின்றது எப்படி என்கிறார்கள். மணல் கொள்ளையில், சாராய பணம், என்று பல கோடிகள் கொட்டினாலும் அரசுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லை என்றால் அரசு நிர்வாக எந்த லட்சணத்தில் செயல்படுகின்றது என்று பாருங்கள். தூய்மை பணியாளர்கள் வயிற்றில் அடித்துதான் கஜானாவை காப்பாற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது இந்த ஸ்டாலின் அரசு. ஏழைகளின் சாபத்துக்கு ஸ்டாலின் தப்பவே முடியாது என்பதுதான் தற்போதைய பொதுமக்களின் ஒரே பேச்சு.


Nathansamwi
டிச 28, 2025 07:35

குருமா கம்யூனிஸ்ட் எவனும் ஆள காணோம் ....


Mani . V
டிச 28, 2025 07:24

மக்கள் விரோத ஆட்சியாளர்கள் நாசமாகப் போகட்டும். விடியா மாடல் ஆட்சி ஒழியவேண்டும்.


Svs Yaadum oore
டிச 28, 2025 07:11

சமூக விரோதிகளை கைது செய்ய துப்பில்லை ....ஆனால் துாய்மை பணியாளர்கள் 900 பேரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்....இது தான் மத சார்பின்மை சமூக நீதி ..


Raj
டிச 28, 2025 07:02

கைது செய்வதில் இந்த அரசாங்கம் இந்தியாவிக்கே முன்மாதிரி. பிரச்சனைகளை பேசி தீர்க்க திராணி இல்லை, காரணம் கஜானா காலி ₹10.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது தமிழகம். இலவசம் என்ற பெயரில் கடன் சுமை ஏறி vittathu


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை