உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகள் சொத்து விவரம் சேகரிக்கிறது காவல் துறை

ரவுடிகள் சொத்து விவரம் சேகரிக்கிறது காவல் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநிலம் முழுதும் உள்ள 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரிக்க, காவல் துறை சார்பில் வருவாய் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.தமிழகத்தில் 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகளுக்கு பின்புலமாக உள்ள, நிதி ஆதாரங்களை கண்டறியும் பணியும் நடக்கிறது. இதில், சந்தேகத்திற்குரிய 41 ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. மீதமுள்ள ரவுடிகளின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ரவுடிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சரிபார்க்க, காவல் துறை சார்பில் வருவாய் துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ரவுடிகள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக, இதற்கான கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

PARTHASARATHI J S
டிச 20, 2024 19:17

பேசாமல் அண்ணாமலைக்கு ஃபோன் போட்டா ஒரே வாரத்தில் DMK file 4 அழகா பிரிண்ட் பண்ணி பைண்ட் செய்து கூரியரிலேயே அனுப்புவார்.


Venkateswaran Rajaram
டிச 20, 2024 12:04

ரவுடிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்


Venkateswaran Rajaram
டிச 20, 2024 12:03

ரவுடிகளுக்கு வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்


V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 11:38

இதில் என்ன செய்தி இருக்கிறது?? காலகாலமாக நடந்து வரும் விஷயம் தான் இது. காவல்துறை ஒரு வழக்கில் எப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவரின் சொத்து மற்றும் வருமான விவரங்கள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இட் டிபார்ட்மெண்ட்டுக்கு கடிதம் எழுதுவதும், அவர்கள் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதும் வெகு சாதாரணம்.


Ramesh Sundram
டிச 20, 2024 11:30

சொத்து மதிப்பை வைத்து என்ன செய்ய போகிறார்கள் ஒரு வேலை கட்டிங் கிடைக்க வழி கிடைக்கும்


R.Kumaresan
டிச 20, 2024 10:33

திருச்சி ஆத்மா போன்ற மருத்துவமனையில் டாக்டர்களே ரவுடிகளை வைத்து நோயாளியென்று ஒருமுறை அவர்கள் சொல்லிவிட்டால் அவர்களின் வீட்டிற்கே வந்து தூக்கிச்சென்றுவிடுகிறார்கள் இதுபோன்ற அதிகம் போய் சொல்லும் ரவுடிகளை வைத்து வேலைசெய்யும் மருத்துவமனைகளை இழுத்துமூடவேண்டும்.


R.Kumaresan
டிச 20, 2024 10:21

சில ஊர்களில் டாக்டர்களே ரவுடிகள் போல் செயல்படுகிறார்கள் திருச்சி ஆத்மா மருத்துவமனையில் அப்படித்தான் பாசன்ட் என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்கே வந்து தூக்கிசென்று அநியாயம் செய்கிறார்கள் இதுபோன்ற மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும்.


Shanmuga Sundaram
டிச 20, 2024 08:40

ரவுடிகளின் சொத்துமதிப்பை விட, அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்தினினை முதலில் கணக்கிட வேண்டும். செய்வார்களா?


Venkateswaran Rajaram
டிச 20, 2024 12:02

ரவுடிகளுக்கு பணம் சப்ளை செய்வதே அரசியல் வாதிகள் தானே ...இதில் இவர்களின் பின்புலம் வேறு கண்டுபிடிக்கிறார்களாம்


rama adhavan
டிச 20, 2024 07:22

கோர்ட் உத்தரவு இன்றி தனி நபர் விபரங்களை காவல்துறை கேட்க முடியுமா? விவரங்களை தரும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு என்ன பாதுகாப்பு? தகவல்களின் நம்பக தன்மை வேறு கேள்விக்குறி? தகவல்கள் இரகசியமாக இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 20, 2024 07:21

சொத்து பதிவு செய்யும்போது நிம்மிம்மாவோட துறை கேள்வி கேட்காதா ???