உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணியின் போது மொபைல்போனில் மூழ்கும் போலீசார்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

பணியின் போது மொபைல்போனில் மூழ்கும் போலீசார்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், பணியில் இருக்கும் போலீசார் மொபைல்போனில் மூழகி கிடக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.நேற்று கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் நெல்லை நீதிமன்றம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் ராமகிருஷ்ணன் என்பவரை, சிறப்பு எஸ்.ஐ. உய்க்காட்டான் துரத்தி சென்றார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணனை பிடித்து கொடுத்தனர். கொலைக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l5zxve2u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, ' பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?' என சரமாரியாக கேள்வி எழுப்பி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடந்து வருகிறது என விளக்கம் அளித்தார்.தொடர்ந்து நீதிபதிகள், கொலை நடந்த போது பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர்.மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ன செய்தனர். பணியில் இருக்கும் போலீசார் மொபைல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் எனக்கூறியதுடன், கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்.ஐ.,க்கு பாராட்டு தெரிவித்ததுடன், சன்மானம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
டிச 22, 2024 06:14

காவல் துறை அட்டூழியத்தல இதுவும் ஒரு பாகம். CCTV access பாக்கறாங்கனு மக்கள் நினைக்கிறாங்க இவங்கள எதுவும் கேட்டுறக்கூடாது, கேட்டா தனிப்பட்ட முறையில பழி வாங்குறாங்க. மத்தவங்க mobile phones பிடுங்கி password பண்ண சொல்லி அதுல phone account மூலமா bankல எவ்வளவு இருக்குனு check பண்ணி பணம் demand பண்றாங்க. இது எப்ப நீதிபதிங்க கேட்பாங்களோ


J.V. Iyer
டிச 22, 2024 04:49

எல்லா அழுத்தங்களும் கைப்பேசிகளின் மூலமாக வருகிறதே? என்ன செய்ய?


Raja
டிச 21, 2024 22:49

காவலர்கள் பணி நேரம் வரையறை இல்லாமல் இருப்பதால் அவர்கள் மொபைல் போனில் உள்ளனர். கோர்ட் வேலையாக இருந்தால் 10 முதல் 5 மணி வரை மட்டுமே. அரசியல்வியாதிகள் வந்தால் பந்தோபஸ்து என்று அவர்கள் வருவதற்கு முதல் நாள் முதலே ஆரம்பித்து அவர்கள் போகும் வரை பணி செய்ய வேண்டும் பெரும்பாலான அரசியல் வியாதிகள், வாரிசுகள் அலட்சியமாக பலமணி நேரம் தாமதமாக தான் வருவார்கள், அவர்கள் வந்து போகும் வரை காவலர்கள் கால நேரமில்லாமல் தேவுடு காக்க வேண்டும். இதில் ஊர்வலங்கள், கோவில் திருவிழா, இயேசு அழைக்கும் கூட்டங்கள் என்று பல இடங்களில் விடிய விடிய பணி செய்ய வேண்டும். காவலர்களும் மனிதர்கள் தானே.


Ravi Kumar
டிச 21, 2024 20:54

சரியாய் சொன்னீர் ,மெட்ரோ நிலையம், போலீஸ் பூத் , பாரா , Patrol எங்கு பார்த்தாலும் போலீஸ் மொபைல் போனில் ..... சுய ஒழுக்கம் வேண்டும் ... உயர் அதிகாரிகள் கண்காணிப்பு வேண்டும் . அல்லது டூட்டி நேரத்தில் ஸ்மார்ட் போன் கூடாது .......


V RAMASWAMY
டிச 21, 2024 19:59

மொபைல் போனின் தாக்கம் மிக அதிகமாகி, அது ஒரு போதை தரும் பொருளாகி விட்ட நிலையில், மக்கள் தன்னை மறந்து, சூழ்நிலை மறந்து, ஆபத்துக்கும் உள்ளாகின்றனர். மிக வேதனை என்னவென்றால், அதன் தாக்கம் குழந்தைகளை, சிறுவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. மொபைல் போன் உபயோகிப்பவர்களுக்கு ஒரு வயது வரம்பு மிக அவசியம். அத்தியாவசிய காவல் துறை போன்ற சில பணிகளில் அவர்கள் பணி நேரத்தில் மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது என்று உத்திரவு போடவேண்டும். மீறினால், நடவடிக்கை அவசியம்.


Barakat Ali
டிச 21, 2024 19:20

பிரச்னை வரும் என்று அரசியல்வாதிகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நீதிமான்கள் வழக்குகளில் இருந்து விலகுவது மட்டும் சரியா ????


சமீபத்திய செய்தி