உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு

காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு

சென்னை : காதல் விவகாரம் தொடர்பாக, துாத்துக்குடி மாவட்டம், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், 27, கடந்த ஜூலை, 27ம் தேதி திருநெல்வேலியில் ஆணவ கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில், இதுபோன்ற ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை ஒப்புக் கொள்ள அரசு மறுத்து வருகிறது. காவல் துறை பதிவேடுகளில், ஜாதி பாகுபாடு காரணமாக நடந்த கொலைகள் என, பதிவு செய்து மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கொலைகள் குறித்து காவல் நிலையங்களில் பட்டியலிடும்போது, நகை பறிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடக்கும்போது, 'ஆதாயக் கொலை' என, பதிவு செய்கின்றனர். அதேபோல, குடும்பத் தகராறு, வாய்த்தகராறு, காதல் மற்றும் பாலியல் தொல்லை, பணம் கொடுக்கல் வாங்கல், நிலத்தகராறு, வரதட்சணை, அரசியல் மோதல் மற்றும் இதர காரணங்களால் நடந்த கொலைகள் என, பட்டியலிடுகின்றனர். ஆனால், போலீசாரின் பதிவேடுகளில், ஆணவ கொலைகள் என்ற வார்த்தை இடம்பெறுவது இல்லை. இதனால், தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடக்கவே இல்லை என்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அரசும் ஆணவ கொலைகளை தடுக்க, தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அசோகன்
ஆக 09, 2025 15:36

கற்பழிப்பு கொலை எதையுமே book பண்ணமாட்டாங்க இந்த திராவிட கும்பல்.......


Rameshmoorthy
ஆக 09, 2025 08:58

We should see the reaction from left, red flag and Mr VC


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை