உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு 9 முதல் 13ம் தேதி வரை வினியோகம்

ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு 9 முதல் 13ம் தேதி வரை வினியோகம்

சென்னை:தமிழக அரசு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது. அதன் வினியோகம் ரேஷன் கடைகள் வாயிலாக, வரும், 9ம் தேதி துவங்குகிறது. இந்த பணிகளை, 13ம் தேதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. அதற்கே ஏற்ப எந்த தேதி, நேரம் கடைக்கு வந்து பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்'களை கார்டுதாரர்கள் வீடுகளில் வழங்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோக முன் ஏற்பாடு குறித்து, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சக்கரபாணி பேசும்போது, ''ரேஷன் பொருட்கள் இருப்பு மற்றும் வினியோக நிலையை மாநிலம் முழுதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். தோகையை வெட்டாமல் முழு கரும்பும் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.

ஒரே தவணை

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகின்றன. கடை ஊழியர்கள், ஒரு நாளில் அரிசி, மற்ற நாட்களில் வேறு பொருட்கள் என, வழங்குகின்றனர். அடுத்த வாரம் முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால், தற்போது கடைக்கு வரும் கார்டுதாரர்களுக்கு, அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு, கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ