உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு 9 முதல் 13ம் தேதி வரை வினியோகம்

ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு 9 முதல் 13ம் தேதி வரை வினியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது. அதன் வினியோகம் ரேஷன் கடைகள் வாயிலாக, வரும், 9ம் தேதி துவங்குகிறது. இந்த பணிகளை, 13ம் தேதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.அதற்கே ஏற்ப எந்த தேதி, நேரம் கடைக்கு வந்து பொங்கல் தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்'களை கார்டுதாரர்கள் வீடுகளில் வழங்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோக முன் ஏற்பாடு குறித்து, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.இதில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சக்கரபாணி பேசும்போது, ''ரேஷன் பொருட்கள் இருப்பு மற்றும் வினியோக நிலையை மாநிலம் முழுதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். தோகையை வெட்டாமல் முழு கரும்பும் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.

ஒரே தவணை

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகின்றன. கடை ஊழியர்கள், ஒரு நாளில் அரிசி, மற்ற நாட்களில் வேறு பொருட்கள் என, வழங்குகின்றனர்.அடுத்த வாரம் முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதால், தற்போது கடைக்கு வரும் கார்டுதாரர்களுக்கு, அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு, கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sakthivel Sakthi
ஜன 05, 2025 08:24

தயவு செய்து இந்த பொங்கல் தொகுப்பை யாரும் வாங்காமல் புறக்கணியுங்கள் மக்களே நாம் மானமுள்ளவர்கள்


duruvasar
ஜன 03, 2025 10:36

கூடுதலாக ஈரோடு கிழக்கு மக்களுக்கு சிறப்பு தொகுப்பும், பொற்கிழியும் கதிரிருக்கிறது என்பதும் மகிழிச்சிதானே வைகுண்டா


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 08:53

இந்த விநியோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்கள், குழந்தைகள் பற்றி பணம் படைத்த வாசகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் பொங்கல் பரிசு விநியோகம் செய்கிற அரசு, பெறுகிற மக்கள் அனைவரையும் அவதூறாக அநாகரிகமாக வெறுப்புடன் விமர்சனம் செய்கிரார்கள். மிகவும் தவறு.


rasaa
ஜன 03, 2025 10:13

60 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டில் இன்னும் கோடானுகோடி மக்கள் இந்த ஒரு கிலோ அரிசிக்கும், ஒரு கிலோ சர்க்கரைக்கும் கையேந்தும் நிலையை எண்ணி சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 15:36

இந்த ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ அஸ்கா சர்க்கரை கொடுப்பவர் காமராஜர் ஆக இருந்தால் வாங்கும் இரண்டரை கோடி ஏழை பங்காளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். பின் குறிப்பு அஸ்கா சர்க்கரை வைத்து பொங்கல் சமைக்க முடியாது. வெல்லம் தான் வேண்டும். வெல்லம் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்து கொடுத்திருந்தால் தமிழக விவசாயிகள் ஆவது ஆனந்தமாக இருந்திருப்பார்கள்.


அப்பாவி
ஜன 03, 2025 08:43

படத்துல இத்தனை ஐட்டங்களைப் போட்டு ஏன் வெறுப்பேத்தறீங்க?


sankar
ஜன 03, 2025 08:19

பழைய ஸ்டாக்குகளை இப்படித்தான் தள்ளிவிட வேண்டும்


GoK
ஜன 03, 2025 07:42

அனைத்தும் தமிழ் மக்களை "வோட்டு" மொத்தமாக பிச்சைக்காரர்கள் ஆக்கிய பெருமை திராவிட மாடலேயே சேரும். சமச்சீர் பிச்சைக்காரர்கள். கொஞ்சம் உப்பும் கொடுங்கள் அப்போதாவது சூடு, சொரணை வருதான்னு பாக்கலாம்.


Venkatesh
ஜன 03, 2025 08:59

சூடு சொரனை இருந்தால் ஏன் மானங்கெட்ட மாடல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்கின்றன?


R.RAMACHANDRAN
ஜன 03, 2025 07:10

இத்தனை காலமாக அடுத்த மாத ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்தது போல சென்ற மாதம் செய்யவில்லை.இந்த மாதமும் இது வரை சப்ளை செய்யாத நிலையில் எப்படி பொங்கலுக்குள் கார்டுதாரர்களுக்கு விநியோகிப்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை