உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செம்மண் குவாரி முறைகேடு வழக்கு பொய்யானது என பொன்முடி வாதம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு பொய்யானது என பொன்முடி வாதம்

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர். விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட பலர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 57 பேரிடம், கடந்த மாதம் விசாரணை முடிந்தது. இதில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். நேற்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி, கவுதமசிகாமணி உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகினர். அவர்களிடம் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியம் குறித்த விபரங்கள் மற்றும் குற்றச்சாட்டு சம்பந்தமாக தனித்தனியாக மாவட்ட நீதிபதி மணிமொழி கேள்வி எழுப்பினார். அப்போது, 'செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மை தான். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண் எடுக்கவில்லை' எனவும், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தங்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளது' எனவும் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S.V.Srinivasan
நவ 12, 2025 08:29

இவங்க செய்யற தவறுக்கு எதிரா வழக்கு போட்டா, உடனே அரசியல் காழ்ப்புணர்ச்சி, பொய் வழக்குன்னு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிச்சுடுவாய்ங்கப்பா. திராவிட மாடல் ஆளுங்களுக்கு இதுவே வழக்கமா போய்டுச்சு. ஆனா makkalukku தெரியும்.


VENKATASUBRAMANIAN
நவ 12, 2025 07:59

கோடிக்கணக்கில் வக்கீல்களுக்கு செலவு செய்ய பணம் எங்கே இருந்து வந்தது. இது ஒன்றே போதும் இவர்கள் கொள்ளை அடித்தது. மக்களை ஏமாற்றும் கூட்டம். இவர்களுக்கு ஓட்டு போடுபவர்கள் சிந்திக்க வேண்டும்


duruvasar
நவ 12, 2025 07:57

ஆமாம் மை லார்ட் அவர்கள் இருவரும் ஒழுக்க சிகாமணிகள் . பால் வடியும் முகத்தை பார்த்து தீர்ப்பு வழங்குங்கள்.


R.RAMACHANDRAN
நவ 12, 2025 07:28

இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் கூட்டம் கோடி கணக்கில் செலவழிப்பவர்களுக்காக கூட்டமாக ஆஜராகின்றனர் நீதி மன்றங்களில். வறியவர்களுக்கு அவர்கள் ஒரு வழக்கறிஞ்சரும் முன் வருவது இல்லை என்பதோடு நீதி மன்றத்தின் பக்கமே தலை காட்டாக கூடாது என்ற நிலையில் செயல்படுகின்றனர்.இலவச சட்ட உதவி என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.வசதிபடைத்தவர்கள் இலவசமாக வைத்தியம் பார்க்க மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்கள் தீட்டி செயல் படுத்துவது போல இலவச சட்ட உதவி என்பதை ஒழித்துவிட்டு அவர்களுக்காக கட்டணம் செலுத்தி உரிமைகளை நிலை நாட்டும் விதத்தில் திட்டங்களை தீட்ட முன் வரவில்லை.


Ravi
நவ 12, 2025 06:49

ஆமாம் நீங்கள் யோக்கிய சிகாமணி தான் சட்டத்தை மீறுவது என்பது உங்களுக்கு தெரியாது.. சரி அங்கே இருந்த மண் எங்கே.. உன்னை போலீஸ்ல மாட்டிவிட எங்காவது ஒழிந்து கொண்டதோ..


Raghavan
நவ 12, 2025 06:13

என்ன வழக்கு இதெல்லாம். கபில் சிபல் கிட்ட போனா கீழ் கோர்ட் மேல் கோர்ட்க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடுவார். திருடியவன் என்றைக்கு நான் கள்வன் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறான். வழக்கு முடிய குறைந்தது இன்னும் ஒரு 30 வருடம் ஆகும் அதற்குள் உன் மகன் புத்திர சிகாமணி அமைச்சர் ஆகிவிடுவான். என்ன ஒரு நாடு என்ன ஒரு சட்டம்.


Oviya vijay
நவ 12, 2025 06:03

முறைகேடு செய்தது இந்த முறையா அல்லது அந்த முறையா? இல்ல ஓசி யா


kumaran
நவ 12, 2025 05:59

எவ்வகையிலும் தகுதி இல்லாதவர் கூறும் வாக்கு மூலம் தகுதி அற்றதாகவே இருக்கும்


Matt P
நவ 12, 2025 05:55

பின்ன....உண்மனையென்றா வாதிடுவார்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை