உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி பதவி இழப்பு: தி.மு.க.,வில் பீர் விருந்து

பொன்முடி பதவி இழப்பு: தி.மு.க.,வில் பீர் விருந்து

திருக்கோவிலுாரில் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் மது பாட்டிலுடன் நடந்த தடபுடல் விருந்தால், அக்கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனாலும், நிகழ்ச்சி பொன்முடி பதவி பறிப்புக்கான கொண்டாட்டம் என தகவல் பரவி உள்ளது.

மீன் வறுவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு கூட்டம் துவங்கிய நிலையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஓட்டுச்சாவடியில் இளைஞர் அணி அமைப்பாளர்களின் பங்களிப்பு குறித்து பேசினார். கூட்டம் நிறைவடைந்த நிலையில், அசைவ விருந்து பரிமாறப்பட்டது. தலைவாழை இலை போடப்பட்டு, பரோட்டா, இட்லி, தோசை, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, மீன் வறுவல் என இலை நிரம்பி வழிய, பக்கத்தில் ஒரு வாட்டர் பாட்டிலும், கூடவே கூலிங்கான பீர் பாட்டிலும் வைக்கப்பட்டது. விருந்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று குதுாகலித்தனர்.'போதை ஒழியட்டும்; பாதை ஒளிரட்டும்' போதைப்பொருள் உங்கள் உடல் நலனை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் நலனையும், நாட்டின் நலனையும் சேர்த்தே கெடுக்கும்' என்ற முதல்வரின் விளம்பர வாக்கியத்தை காற்றில் பறக்கவிட்டு, கட்சியினர் மது விருந்தில் திளைத்தது, கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிர் அணியை சேர்ந்தவர். பொன்முடி அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டாடும் வகையிலேயே, எதிர் அணியைச் சேர்ந்தோர் மது பாட்டிலுடன் விருந்து நடத்தியுள்ளனர் என, இந்த விருந்து நிகழ்ச்சி குறித்து பொன்முடி ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

கொண்டாட்டம்

இதுகுறித்து, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் கூறியதாவது: கட்சியினரை உற்சாகப்படுத்த, விருந்தும் மது பாட்டிலும் வைக்கப்பட்டது. இன்றைய சூழலில், மதுவுடன் விருந்து நிகழ்ச்சி நடப்பது அபூர்வமானது அல்ல.கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் பொன்முடிக்கு ஆதரவான ஒரு அணியும், எதிர்ப்பாக ஒரு அணியும் செயல்படுகிறது. கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சியை, பொன்முடி பதவி பறிப்பை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது என பொன்முடி ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். அதனால், விருந்தில் மது பாட்டில் வைக்கப்பட்ட தகவலைக் கேள்விப் பட்டு, அதை அவர்கள் பெரிதுபடுத்தி, சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். அதற்காகவே, விருந்து நிகழ்ச்சி தொடர்பான வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாராய மாடல்!

திருக்கோவிலுார் அருகே நடந்த, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், பீர் பாட்டிலுடன், உணவு பரிமாறப்பட்டது, மிகவும் மோசமான செயல். இது திராவிட மாடல் அல்ல. சாராய மாடல் என, உறுதி செய்யும் வகையில், இந்நிகழ்வு அமைந்துள்ளது.- ராஜேஸ்வரி பிரியா, தலைவர், அனைத்து மக்கள் அரசியல் கட்சி - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

c.mohanraj raj
ஏப் 30, 2025 06:58

ஆர்எஸ்எஸ் இருப்பதால்தான் நீங்கள் தமிழில் பதிவு போட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் இல்லை என்றால் முஸ்லிமாக மாறி உருதில் பதிவு போட வேண்டிய நிலை வந்திருக்கும்


துர்வேஷ் சகாதேவன்
ஏப் 30, 2025 06:23

RSS போன்ற உன்னத அமைப்பை காசுமீர் அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாமே . முப்படை எல்லாம் வெஸ்ட் இவர்களை அனுப்பி சுதந்திரத்திற்கு இவர்கள் செய்த அளப்பரிய வேலை போல இதை செய்ய சொல்லலாமே


Kasimani Baskaran
ஏப் 30, 2025 04:01

திராவிட சாயம் பூசியுள்ளோருக்கு தீம்க்காவில் எதிர்ப்பு போல தோன்றுகிறது. ஆ ராசாவுக்கு அடுத்த எதிர்ப்பு கிளம்பும். திராவிடம் என்றாலேயே பெரும்பாலும் ஆபாசப்பேச்சாளர்கள்தான். ஆபாசத்தின் அளவு வேறுபாடும். பாரதி நாகரீகமாக மிரட்டுவார் - மீதம் உள்ளத்துகள் கொச்சையாக பேசுவார்கள்... பகுத்தறிவு சிறிதும் இல்லாத வாக்காளர்கள் வாக்குரிமையை விற்று விடுவதால் பல பிரச்சினைகள் - அதில் இதுவும் ஒன்று.


Anantharaman Srinivasan
ஏப் 29, 2025 23:23

எந்த திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தாலும் போதையும் ஒழியாது மக்கள் தள்ளாடும்பாதையும் மாறாது. போதைப்பொருள் விற்பனை ஆட்சியாளர்ளின் கற்பகத்தரு. குடிகாரன் உடல் கெட்டு இறந்தாலும், அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தாலும், முதல்வரும் டாஸ்மார்க் சகாக்களும் கவலை படுவதில்லை. திரைமறைவில் கஜானா நிரம்பினால் போதும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 29, 2025 22:27

பாட்டிலுக்கு பத்து ருபா சட்டம் இந்த பீ பாட்டிலுக்கு பொருந்துமா பொருந்தாதா


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2025 20:45

செந்தில் பாலாஜி, நேரு, பொன்முடி, துரைமுருகன், ஆற்காடு, ராஜா, கனிமொழி என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறுநில மன்னர் திமுக ஆட்சியில் உள்ளார்கள். அத்தனை பேரும் விரைவில் அமலாக்கத்துறையால், உள்ளே போகபோகிறார்கள். தொடர்ந்து திமுகவினருக்கு பீர் விருந்து தான்.


Partha
ஏப் 29, 2025 19:28

மிக மிக அருமை.. வாழ்க திராவிட மாடல் அரசு


Suppan
ஏப் 29, 2025 16:38

அண்ணாதுரையில் ஆரம்பித்து கருணா வகையறா லாகிரி வஸ்துக்கள், மாது ஆபாசப்பேச்சுகளுக்கு முன்னோடிகள். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி


Rangarajan Cv
ஏப் 29, 2025 16:31

I get fear


Yaro Oruvan
ஏப் 29, 2025 15:49

தமிழக மக்களே இன்னமும் நீங்கள் இந்த கும்பலை நம்பினால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே நாசக்காடு செய்துவிடுவார்கள் திருட்டு முகவினர் .. யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் இந்த திராவிஷ திருட்டு கும்பலை தவிர.. 2026 ல் பாடம் புகட்டுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை