வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காவல் துறை தாக்கல் செய்தால் அது முழுமையான வீடியோவாக இருக்காது.
சென்னை : சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது. சென்னையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கட்சி பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இருப்பினும், இது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. கடந்த முறை, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளை வைத்தே பேசியதாக பொன்முடி தரப்பு தெரிவித்ததால், அது தொடர்பான விபரங்களையும் தாக்கல் செய்யுமாறும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோ மற்றும் 1972ம் ஆண்டு அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளின் விபரங்களையும் தாக்கல் செய்தார். பின், இந்த வீடியோ மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்., 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
காவல் துறை தாக்கல் செய்தால் அது முழுமையான வீடியோவாக இருக்காது.