உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச்களில் ஹிந்தியில் பிரார்த்தனை

சர்ச்களில் ஹிந்தியில் பிரார்த்தனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 21 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். பின்னலாடை தொழிற்சாலைகளில் மட்டும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வடமாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்களுக்காக, திருப்பூர் கத்ரீனாள் சர்ச் உட்பட பெரும்பாலான 'சர்ச்'களில், சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. வடமாநில மக்கள், பிரார்த்தனையில் பங்கேற்றனர். ஹிந்தி மொழியில், கிறிஸ்துவ ஆராதனை பாடல்களை பாடியபடி, பாதிரியாரை அழைத்து வந்தனர். ஹிந்தியில் பிரார்த்தனை நடந்தது. வடமாநில தொழிலாளர்களுக்காக நடந்த பிரார்த்தனை என சர்ச் ஊழியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை