உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்கூட்டியே ஸ்கேன் செய்வதால் மது விற்பனையில் தொடரும் முறைகேடு

முன்கூட்டியே ஸ்கேன் செய்வதால் மது விற்பனையில் தொடரும் முறைகேடு

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டிலை விற்கும் போது, 'ஸ்கேன்' செய்யாமல், முன்கூட்டியே, 'ஸ்கேன்' செய்வதால், அந்தந்த நேர விற்பனையை துல்லியமாக அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. கடை ஊழியர்கள், விற்பனையை குறைத்து காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க, அனைத்து செயல்பாடுகளையும் முழு கணினிமயமாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்களை அனுப்புவது, கடைகளில் பாட்டில்களை விற்பது வரை, 'ஸ்கேன்' செய்யப் படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மது கடைக்கும், மூன்று - நான்கு மொபைல் போன் வடிவிலான, 'ஸ்கேனர்' கருவிகளும், ஒரு, 'பிரின்டர்' சாதனமும் வழங்கப்பட்டு உள்ளன. அதில், ஸ்கேன் செய்த பின்தான் மதுபாட்டில்கள் விற்கப்பட வேண்டும். இதனால், மதுபானம் எங்கிருந்து அனுப்பப்பட்டது; கடைகளில் உள்ள மது பாட்டில்கள் இருப்பு உள்ளிட்ட விபரங்களை, டாஸ்மாக் அதிகாரிகள் கணினி வாயிலாக துல்லியமாக அறிய முடியும். ஆனால், பல கடைக ளில் மது பாட்டிலை விற்கும் போது, 'ஸ்கேன்' செய்யாமல், முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்து விடுகின்றனர். பின், வாடிக்கையாளர்கள் வரும் போது விற்கப்படுகிறது. இதனால், கணினிமய திட்டத்தை அமல்படுத்தியும், ஒவ்வொரு கடையிலும் நடக்கும் அந்தந்த விற்பனையை துல்லியமாக அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, கடை ஊழியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு நபரையும் நிற்க வைத்து, மது பாட்டிலை ஸ்கேன் செய்து விற்பதற்கு, குறைந்தது ஒருவருக்கு மூன்று நிமிடமாகும். இதனால், அதிக நேரமாகி, கூட்டம் சேர்ந்து, தள்ளுமுள்ளு ஏற்படும். எந்த மது வகை அதிகம் விற்பனையாகும் என்ற விபரம், ஊழியர்களுக்கு தெரியும். எனவே, கடைகளில் நேரம் கிடைக்கும் போது, முன்கூட்டியே ஸ்கேன் செய்து, பின் மது வாங்க வருவோரிடம் விற்கப்படுகிறது. இதற்கு, 51 விநாடியாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை