உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு!

சென்னை: முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கு, ''நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூலை 21ம் தேதிக்கு முதல்வருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவர் அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது. பின்னர் டாக்டர்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dq3jafuw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஜூலை 31) முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கிடையே, டாக்டர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பின், இன்று (ஜூலை 31) முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார்.வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் சேர தேமுதிக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர், முதல்வரை நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

நன்றி சொல்கிறார் முதல்வர்!

பிரேமலதா சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, ''நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி!'' என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நட்பு ரீதியாக...!

முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு குறித்து, நிருபர்கள் சந்திப்பில் பிரேமலதா கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்தேன். முதல்வர் ஸ்டாலினுடன் விஜயகாந்துக்கு 45 ஆண்டு கால நட்பு. விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்து வந்தேன்.யாருடன் கூட்டணி என்று தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் 100 சதவீதம் அரசியல் காரணங்கள் இல்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.

நலம் விசாரிப்பு

சென்னையில் அடையாறு பூங்காவில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

panneer selvam
ஜூலை 31, 2025 22:39

Premlatha madame is well seasoned business woman and she knows how to make a demand and have a deal that covers their expenses till next two elections.


Easwar Kamal
ஜூலை 31, 2025 17:17

தேமுதிக விஜயகாந்த் இருகும்போதே கட்சி அழிந்துவிட்டது. இந்த கட்சி சார்ந்த ஜாதி தெலுங்கு பேசும் மக்களை நம்பி உள்ளது. இந்த கட்சி சார்ந்த ஜாதி தமிழகத்தில் சொற்ப அளவில்தான் இருப்பார்கள் அனல் பண பலம் உள்ளது. அதனால் இவர்கள் கட்சி நடத்த முடிகிறது திமுக எப்போதும் எடுத்துதான் பழக்கம் அதிமுக போன்று கொடுக்க மாட்டானுவ. திமுகவுக்கு தெரியும் இவர்களுக்கு பெரியதக ஒட்டு வங்கி கிடையாது. தங்கள் சின்னத்தில் நிக்க வைத்து முழுவதுமாக முழிங்கி விடுவார்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 31, 2025 16:38

நாங்கள் உங்களுடன் சேரத்தயார் 2026 தேர்தலுக்கு - இப்படிக்கு பிரேமலதா மற்றும் பன்னீர்செல்வம் இது தான் சந்திப்பின் ரகசியம்


SUBRAMANIAN P
ஜூலை 31, 2025 15:39

உன்னைய சொன்னமாதிரி கோவம் வருது. எதுக்கு என் கருத்துக்கு பிஜேபி ய கொண்டுவர. அவசரக்குடுக்க


G Mahalingam
ஜூலை 31, 2025 14:54

இரண்டு சீட்டு ஒரு பெரிய பெட்டி கொடுங்கள். போதும்.. 2000 நோட்டு ஒழிந்ததால் பெரிய பெட்டி தேவை படுகிறது. வேற கட்சியிடம் பெரிய பெரிய பெட்டி இருக்க வாய்ப்பு இல்லை. ராஜா ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன. எங்களுக்கு கவலை இல்லை.


NBR
ஜூலை 31, 2025 14:49

Next Kamal for Rajya sabha seat.


எஸ் எஸ்
ஜூலை 31, 2025 14:30

எந்த கொள்கையும் இல்லாத, மக்களிடம் எந்த ஆதரவும் இல்லாத கட்சி. நலம் விசாரித்து ராஜதந்திரமாக காய் நகர்த்துகிறாராம். ஹா.. ஹா...


Nagarajan D
ஜூலை 31, 2025 14:30

நாடகம் நடக்கிறது எல்லோரும் பார்த்து ரசிங்க அவ்வளவு தான்


SUBRAMANIAN P
ஜூலை 31, 2025 13:58

வெட்கம், மான, அவமானம் , சூடு, சுரணை இதெல்லாம் இருந்தால் இந்தக்காலத்தில் அரசியல் செய்யமுடியாது என்பதை முழுமையாக நம்புகிறார்கள். பாவம் மக்கள்தான்.


P. SRINIVASAN
ஜூலை 31, 2025 14:41

நீ சொல்லும் எல்லாம் பிஜேபிக்கு பொருந்தும்


vivek
ஜூலை 31, 2025 15:58

இப்படிக்கு திமுக அடைப்பு ஶ்ரீனிவாசன்


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 13:39

மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வாக்குறுதி கிடைக்கும். பிறகு இதயத்தில் மட்டும் இடம் கொடுப்பார்.


புதிய வீடியோ