உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அறிவிப்பு

கனமழையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அதிகனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், டெல்டா மாவட்டங்களில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது,'' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் அதிகனமழை பெய்வதற்கான 'ரெட் அலர்ட் ' எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்து உள்ளது.இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. மாவட்ட நிர்வாகங்களுக்கு வேண்டிய அறிவுரையை முதல்வர் வழங்கி உள்ளார். அங்கு தகுந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிரச்னை வந்தால் மக்கள் தங்க வேண்டிய இடத்தை தயார் நிலையில் வைத்துள்ளோம். எந்த பிரச்னை வந்தாலும் அரசு சமாளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

veeramani
நவ 26, 2024 09:49

தமிழ்த்தாயின் சிறப்பு மகனாகிய கலைஞரின் வாரிசு மக்களின் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சுமார் என்பது ஆண்டுகள் கடந்த கோபாலபுரம் ராமச்சந்திரன் அவர்களுக்கு தயவு செய்து ஓய்வு கொடுங்கள்.


Ramesh
நவ 26, 2024 07:52

காவல்துறையினரை அனுப்பி ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்து கனமழையை சிறையில் அடைத்தால் எல்லாம் சரியாகிவிடும்


Kasimani Baskaran
நவ 26, 2024 06:19

அதிக பட்சமாக வாகனங்களை பாலத்தில் நிறுத்தி வைக்க அனுமதிப்பார்கள். சமூக சேவை நிறுவனங்கள் குடை கொடுக்கும். ஆர் எஸ் எஸ் சாப்பாடு போடும். மற்றப்படி திரும்பவும் அதே அடுத்த ஆண்டும் ரிப்பீட்டாகும். பாலத்தில் அரசு அங்கீகாரத்துடன் வாகனம் நிறுத்த அனுமதி என்பது புதிது . ஏழைகளுக்கும் சட்டி பானை போன்ற தட்டு முட்டு ஜாமான்களை பாலத்தின் மீது நிறுத்தி வைக்க அனுமதி கொடுக்க வேண்டும்.


Mani Vellachamy
நவ 26, 2024 05:46

அண்டாவும், குண்டாவும் ரெடியாக இருக்கிறதா?


வால்டர்
நவ 25, 2024 20:31

என்ன ஏற்பாடு? ஓட்டல் வாசல்ல சாப்பாடு தயார் டிபன் தயார்ன்னு போட்ட மாதிரி. இதற்க்கு முன் ஏற்பட்ட பாதிப்பு என்ன இப்பொழுது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை? கட்சிகள் தான் மாறுகின்றன காட்சிகள் மாறவில்லை.


Ramesh Sargam
நவ 25, 2024 20:19

கே.கே.எஸ்.எஸ்.ஆர். யாராவது இதை விரிவுபடுத்துங்கள் ப்ளீஸ்.


SUBBU,MADURAI
நவ 25, 2024 22:09

கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டியார் ரங்கநாதன் ராமச்சந்திரன். (Kopalapuram Kanthasamy Subbu Reddiyar Ranganathan Ramachandran)


SUBBU,MADURAI
நவ 26, 2024 06:28

கோபாலபுரம் கந்தசாமி சுப்பு ரெட்டியார் ரங்கநாதன் ராமச்சந்திரன்.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 25, 2024 20:13

இவனுக வாயை மூடிக்கிட்டு எதுவும் சொல்லாம சும்மா இருந்தாலே நம்ம பாட்டுக்கு பயமில்லாம நிம்மதியா இருப்போம் ஆனா இவிங்க கனமழையை எதிர் கொள்ள தயார் என்று அந்த மழைக்கே சவால் விடும் போதுதான் நமக்கு உண்மையிலேயே பயம் வருகிறது. போன வருஷமும் இப்படித்தான் மழை வெள்ளத் தடுப்பு பணிகள் முடிந்து விட்டது என்று மேயர் முதல் அமைச்சர்கள் வரை ஆளாளுக்கு ஒவ்வொரு சதவீதக் கணக்கை சொன்னானுக ஆனால் மக்கள் பட்ட கஷ்டமும் அவர்கள் விட்ட கண்ணீரும் இப்போது நினைத்தாலும் மனது வேதனைப் படுகிறது எனவே இந்த திராவிடமாடல் அரசை நம்பாமல் மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இப்போதே எடுப்பது சாலச் சிறந்தது.


Ramesh Sargam
நவ 25, 2024 20:05

ஒருவேளை பெரிய கொடையை umbrella வாங்கி இருப்பாரோ... மக்களை மழையிலிருந்து காப்பாற்ற...


முருகன்
நவ 25, 2024 19:43

இயற்கையை கணிப்பது கடினம் கவனமாக இருக்க வேண்டும்


sankar
நவ 25, 2024 19:40

ஆமாம் - மஹேந்திரகிரியை குடையாக பிடிக்க போகிறார்


புதிய வீடியோ