உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளத்தில் சிக்கிய தனியார் பஸ்; பயணிகளை மீட்ட கிராம மக்கள்

வெள்ளத்தில் சிக்கிய தனியார் பஸ்; பயணிகளை மீட்ட கிராம மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பஸ்சில் இருந்த பயணிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், உபரி நீர் கிளியாற்று வழியாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கில் தனியார் பஸ் ஒன்று சிக்கிக் கொண்டது. சுற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைக் கண்ட கிராம மக்கள் பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய பஸ் நீண்ட நேரம் போராடி மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sundarsvpr
டிச 13, 2024 16:58

தீங்கு இல்லாமல் நாடு எல்லாம் செழித்திட மாதம் மும்மாரி மழை பெய்த காலங்களும் இருந்துள்ளன. நாம் காண இயலவில்லை. இவ்வாறு இப்போது இல்லை. ஏன்? வெள்ளத்தில் சிக்கிய பேருந்தை கிராம மக்கள் மீட்டது போல் ஆபத்து காலத்தில் வீட்டில் முடங்கிகிடக்காமால் உதவும் எண்ணம் இருக்கவேண்டும். இதற்கு பரிகாரம் இறை செய்திடும். செயலகத்தில் உட்கார்ந்து அறிக்கைகள் குறை கூறிக்கொண்டு இருத்தல் எதற்கும் உதவாது. இறைவன் நம் எண்ணம் செயல்களை கவனிக்கிறான் என்பதனை நம்பவேண்டும்.


Krishnamurthy Venkatesan
டிச 13, 2024 14:27

வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது தெரிந்தும் பேருந்தை இயக்கி இருக்க கூடாது. பயணிகளின் வற்புறுத்தலா அல்லது கலக்க்ஷன் பேராசையா?


Anantharaman Srinivasan
டிச 13, 2024 11:27

விபத்து நடந்து இறந்தபின் நிவாரண பணம் கொடுக்கத்தான் திராவிட மாடல் அரசு லாயக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை