உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செப்.9 முதல் ராமநாதபுரத்தில்  2 மாதங்களுக்கு தடை உத்தரவு

செப்.9 முதல் ராமநாதபுரத்தில்  2 மாதங்களுக்கு தடை உத்தரவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள், பசும் பொன்னில் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு இரு மாதங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தர விட்டுள்ளார். அவரது அறிக்கை: பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள், அக்., 30ல் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்., 9 முதல் இரு மாதங்களுக்கு புதிய குற்றவியல் சட்டப்படி (163 பி.என்.எஸ்.எஸ்., ) தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலம் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் அனுமதியில்லை. மேலும் மாவட்டத்தில் செப்.,9 முதல் 15 வரையும், அக்.9 மற்றும் அக். 25 முதல் 31 வரையும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், டூவீலர்களில் அஞ்சலி, மரியாதை செலுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வர வெளியூர் வாகனங்களுக்கு அனுமதியில்லை. தலைவர்களின் நினைவிடத்திலிருந்து 1 கி.மீ.,க்குள் ஜோதி ஓட்டங்கள் எடுத்துவரவும் அனுமதியில்லை. முறையான அனுமதி பெற்று ஜோதி ஓட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை