உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்பட்டியில் வேட்டையன் படத்திற்கு எதிர்ப்பு

கோவில்பட்டியில் வேட்டையன் படத்திற்கு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படத்தில், ஒரு காட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசிரியை ஒருவரை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து வெளியிட்டதாக இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, 'டிவி' செய்தியில், கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி மாணவர்கள் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற தெரிவிக்கப்படும்.அந்த காட்சிகளை பார்த்த கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவில்பட்டி காந்திநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கா விட்டால் போராட்டம்

இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ராஜேஷ்கண்ணா தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று திடீரென வேட்டையன் படம் திரையிடப்பட்டுள்ள லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காந்திநகர் அரசுப் பள்ளியை தவறாக சித்தரித்த காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லையென்றால் திரைப்படத்தை ஒளிபரப்ப விடமாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 11:39

குறிப்பிட்ட பள்ளிதான் திரைப்படத்தில் வருகிறது என்று பள்ளியை அடையாளம் காணும் அளவுக்கு ஏன் திரைப்படம் எடுக்கப்பட்டது ?


subramanian
அக் 12, 2024 20:24

மொத்த தமிழ்திரையுலகும் திமுகாவின் பிடியில் உள்ளது.தேசவிரோத, ஹிந்து விரோத ,பிராமண விரோத படங்கள் வரும். நீங்கள்தானே ஒட்டு போட்டீர்கள் ? வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தாகிவிட்டது , குத்தகைக்கு எடுத்தவன் என்னவேண்டுமானாலும் செய்வான்......


nv
அக் 12, 2024 11:37

இந்த படம் வெறும் குப்பை.. NEET க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு திராவிட படம்.. பெரும் நடிகர்களுக்கு பணம் கொடுத்து மக்களை ஏமாற்றும் படம்.. ரஜினி ரசிகர்களை நம்பி எடுத்த ஒரு படு சாதாரணமான படம்.. தயவு செஞ்சு இதற்க்கு விளம்பரம் தர வேண்டாமே


M.R. Sampath
அக் 12, 2024 10:41

நான் சமீப காலங்களில் படங்கள் பார்பது இல்லை. வேட்டையன் படத்தின் பற்பல விமர்சனங்கள் கேட்ட பின் ஞானவேல் போன்றவர்கள் ஹிந்துக்களை இழிவு படுத்தும் வகையில் படம் எடுப்பது தெரியவருகுகிறது. மாணவர்கள் ஆசிரியரின் ஆபாச படங்களை எடுப்பதாக காட்சிகள் அமைப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த அருவருக்கத் தக்க பொய்யான செய்திக்கு ஒரு குறிப்பிட்ட அரசுப்பள்ளியை பயன் படுத்தி இருப்பது விஷமத்தனம். ரஜினிகாந்த் அவரக்ளும் சமீப காலங்களாக இத்தகைய உண்மைக்குப் புறம்பாக ஒருதலைப் பட்ச மாக பரப்புரை செய்யும் படங்களில் நடித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் பரவலாக செய்யப்பட்டு வருகிறது. கவிஞர் கண்ணதாசன் போன்றோர் நாத்திகத்திலிருந்து ஆன்மீகத்திற்கு மாறியது வரலாறு. மாறாக ரஜினிகாந்த்தின் இந்த விபரீத மாற்றம் வருந்தத்தக்கது. ஏமாற்றம் அளிக்கிறது.


S Sivakumar
அக் 12, 2024 10:27

ஏன் அரசு பள்ளி தனியார் நிறுவன பள்ளி அனுமதிக்குமா? மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான கருத்தை தெரிவிக்கவும்


M S RAGHUNATHAN
அக் 12, 2024 09:07

இந்த படம் பல தவறான செய்திகளை சொல்கிறது. ரஜினிகாந்த் கதையை முழுமையாக தெரிந்துகொண்டு, புரிந்து கொண்டு இதில் நடித்தாரா? மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு எதிர்மறையாக எடுக்கப்.பட்ட படம். ஏற்ற தாழ்வு எதில் இல்லை ? BHEL தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு mechanic க்கும் துப்பாக்கி தொழிற்சாலையில் அந்த மாதிரி வேலை பார்க்கும் ஒரு mechanic க்கும் ஊதிய வேறு பாடு உள்ளது. ரூர்கெலா இரும்பு/உருக்கு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒருவருக்கும் அதே போன்று அதே நிலையில் உள்ள டாடா உருக்கு ஆலையில் வேலை பார்ப்பவர்க்கும் நிறைய பாகுபாடு இருக்கிறது. அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஒரு மந்திரியின் கார் ஓட்டுனருக்கும், ஒரு டிராவல்ஸ் கம்பனியில் வேலை பார்க்கும் ஒரு ஒட்டுனருக்கும் ஊதிய வேறுபாடுகள் இல்லையா ? எங்கே சமத்துவம் இருக்கிறது. மயானத்தில் கூட ஒரு VIP மறைந்தால் அவர் சடலம் எரியூட்ட வரும்போது சுத்தமாக வைக்கப் படுகிறது. அவர் சடலம் எரியூட்ட பட்டபின் தான் முன்னதாக வந்த சடலம் எரியூட்டப் படுகிறது. ஏன் இந்த பாகுபாடு. ஒரு கல்யாண ஊர்வலம் நடத்த வேண்டும் என்றால் சாதாரண மனிதர்களுக்கு 108 விதிகள் சொல்கின்றனர். அதே ஒரு முக்கிய பிரமுகர் பிறந்த நாள் விழாவாக இருக்கட்டும் அல்லது நினைவு நாள் விழாவாக இருக்கட்டும் அல்லது மரண ஊர்வலம் ஆக இருக்கட்டும் விதிகள் காற்றில் பறக்க விடப் படுகின்றன. ஞானவேல் இதைப்பற்றி ஏன் பேசுவதில்லை அல்லது படம் எடுப்பதில்லை..


krishna
அக் 12, 2024 08:54

SUPER STAR IVARU ENNA KEVALAM.PALLU PONA KEZHAM PANAM PANAM PANA VERI MATTUME.100 KODI ORU PADATHUKKU INDHA VAYADHIL.KATTUMARAM KUDUMBA MIRATTALUKKU BAYANDHU KATCHI AARAMBIKKAMA ODIYA ULAGA MAHA KOZHAI.MUTTAL DUMILANS WHISTLE ADICHAAN RASIGARGAL MUKKIYAMAAGA INDHA KEVALATHUKKU KAARANAM.ULAGA MAHA KANJA PRABU VERU.


RAMAKRISHNAN NATESAN
அக் 13, 2024 12:16

நாம் டைப் செய்வது எந்த மொழியில் திரையில் தோன்றுகிறது என்கிற காமன்சென்ஸ் கூட இல்லையா ??


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 12, 2024 07:27

வழக்கம் போல திராவிட மாடல் அரசு சினிமா கூத்தாடிக்கு துணை போய் திமுக ரவுடிகள் மூலமாக சுலபமாக பிரச்சினை தீர்த்துவிடும். எந்த ஊடகமும் இது பற்றி செய்தி வெளியிட கூடாது என்ற உத்தரவு நடைமுறை படுத்தப்படும். காந்தி அரசு மேல் நிலைப் பள்ளி என்ற ஒரே பெயர் காரணத்துக்காக நமது உலகையே நல் வழி படுத்தும் கதாநாயகன் இது போன்று சினிமா செய்திருப்பார். சமீபத்தில் காந்தி பிறந்த நாளன்று மது ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் திமுக அரசின் உத்தரவு படி மாநாடு நடத்தி அதில் காந்தியை கேவலமாக ஒரு தலைவர் பேசி மது ஒழிப்பு மத்திய அரசின் செயல் அதை இந்தியா முழுவதும் செயல் படுத்த வேண்டும் என்று மதுவை விற்கும் மாநில அரசுக்கு ஆதரவாக மது ஒழிப்பு மாநாடு நடத்தினார். வேங்கை வயல் என்ன ஆயிற்று என்று எல்லோரையும் மறக்கடித்து ஆகி விட்டது. பாலியல் குற்றங்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அனைவரும் மறக்கடிக்க செய்து விடப்பட்டது. சாம்சங் நிறுவனத்தை தொழில் ரீதியாக மிரட்டும் விதத்தில் தொழில் செய்ய விடாமல் வழக்கம் போல திமுகவின் துணை நிறுவனம் கம்யூனிஸ்ட்களை வைத்து நாடகம் அரங்கேற்றியாகிவிட்டது. செளத் இண்டியா விஸ்கோஸ் மால்கோ கோவை பஞ்சாலைகள் போன்ற பிரமாண்ட தொழில் நிறுவனங்கள் கதி தான் இனி சாம்சங்குக்கும்.


Kasimani Baskaran
அக் 12, 2024 06:55

தமிழக பள்ளியைதான் காட்டமுடியும்.. உபியில் உள்ள பள்ளியையா காட்டமுடியும் ? நூறு சதவிகிதம் தேர்ச்சி காட்டும் அரசு பள்ளி என்றால் யாருக்குத்தான் எரிச்சல் வராது.


murali srinivasan
அக் 12, 2024 05:32

ஒரு நல்ல பள்ளியை தவறாக சித்தரித்தது தவறு. கண்டிக்கபட வேண்டிய ஒரு காட்சி.


vadivelu
அக் 12, 2024 07:25

கலவியை வைத்து வியாபாரம் எய்வது கல்வி ஹந்தைகள் மட்டும் இல்லை, இந்த சினிமா கதை வியாபாரிகளும்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை