உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியீடு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் பா.ம,க., நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் பா.ம.க., 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

வாக்குறுதிகள் என்னென்ன?

* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gq9vabvq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு.* மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* காவிரி- கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை.* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். * என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை.* தனியார் துறை நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும். * தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழகத்தை உருவாக்குவோம்.* 'பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை' என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.* தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும்.* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

A1Suresh
மார் 27, 2024 13:07

உள்கட்டமைப்பு அதாவது ரயில்வே, விமானம், கப்பல், நெடுஞ்சாலை துறைகள், சுயசார்பு பொருளாதாரம், சுய உற்பத்தி, டிஜிட்டல் கரென்சி, அறிவியல் தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்துவது- செயற்கை நுண்ணறிவு போன்றன எதுவுமே இல்லையே ?


Venkateshpp Venkatesh
மார் 27, 2024 16:22

அது எல்லாம் எங்களுக்கு தெரியாது


Venkateshpp Venkatesh
மார் 27, 2024 16:22

அது எல்லாம் எங்களுக்கு தெரியாது


சொல்லின் செல்வன்
மார் 27, 2024 12:58

petti vanganum, therthalukku therthal katchi maaranum avvalavuthan


தமிழ்வேள்
மார் 27, 2024 12:58

Reservation in Private sector is Impossible Private sector needs only eminent and efficient Staff strength This Election Manifesto is a an election Gimmick Nothing more than that


Shankar
மார் 27, 2024 12:19

ஒரு சில திட்டங்களைத்தவிர ஏற்புடையதே


மேலும் செய்திகள்