உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சிலை கரைப்பில் வழிகாட்டுது புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம்

விநாயகர் சிலை கரைப்பில் வழிகாட்டுது புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம்

புதுச்சேரி: நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் இந்தாண்டு முன்மாதிரி முயற்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் அம்மாநில அரசின் முயற்சியை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விநாயகர் சதுர்த்தி, நாடு முழுதும், கடந்த 27ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் பூஜைகள் நடக்கின்றன. இந்த சிலைகள், நாளை பல்வேறு இடங்களில், நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.மேள தாளம் முழங்க, பூமாலைகள், பிளாஸ்டிக் குடைகள், விதவிதமான ஆடை அலங்காரங்களில் ஊர்வலமாக கொண்டு வந்து சிலைகள் கரைக்கப்படும்.சில ஆண்டுகளாக களிமண் தவிர்த்து, ரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்ததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு, சிலைகளைக் கரைக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பூமாலை, பிளாஸ்டிக் குடைகள், ஆடை அலங்காரங்களை அப்படியே நீர்நிலைகளில் விட்டு விடுவதால், குப்பைகளாக டன் கணக்கில் சேகரமாகின்றன; இவையும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாகவே உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் அட்டகாசமான யோசனையை தெரிவித்து, முதல்முறையாக புதுச்சேரியில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது.புதுச்சேரியில், 1 அடி முதல், 31 அடி வரை, 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, நாளை பழைய துறைமுகம் அருகே கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் பெரும் முயற்சி எடுத்துள்ளது.

மாலைகள்

ஊர்வலமாக கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் டன் கணக்கிலான மாலைகளை தனியாக சேகரிக்க, கடற்கரையில் தனி அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் மாலைகள், பிள்ளையார்குப்பத்தில் உள்ள சவுக்கு பண்ணை நர்சரிக்கு அனுப்பப்பட உள்ளன. அங்கு, மாலைகளில் உள்ள நார்களை அகற்றிவிட்டு, பூக்கள் மட்டும் உரப்படுக்கையாக கொட்டப்படும். அதன் மீது மண்ணை கொட்டி மட்கும் வகையில் செய்யப்படும். 15 நாட்களுக்கு பின் அவை மட்கியதும், சவுக்கு மரக்கன்று உற்பத்திக்கும், தோட்டக்கலை செடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட உள்ளன.

பிளாஸ்டிக் பொருட்கள்

கற்பூரம், ஊதுவத்தி, பிளாஸ்டிக் பைகள் உட்பட பல்வேறு பொருட்களும் தனித்தனியே சேகரிக்கப்பட உள்ளன. இவை, மறுசூழற்சி மூலப்பொருட்களாக அரைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பக்கெட், குவளை, மிதியடி உள்ளிட்ட பொருட்களாக மாற்றப்பட உள்ளன. இதற்காக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆடைகள்

மூன்றாவதாக விநாயகர் சிலைகளுக்கு உடுத்தப்படும் டன் கணக்கான ஆடைகளை சேகரித்து, அவற்றை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சிமென்ட் தொழிற்சாலையில் கழிவு பொருட்கள், எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுடன் இவற்றையும் கலந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காகவும் மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த மூன்று முயற்சிகள் மூலம், 2 டன் அளவிற்கு பூமாலைகள், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 750 கிலோ ஆடைகள் கடலில் கலக்காமல் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட உள்ளன.'புதுச்சேரி அரசின் இந்த முன்மாதிரி முயற்சியை, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தினால், கடற்கரையோரங்களும், சாலைகளும் அலங்கோலமாவதை தவிர்க்கலாம். மேலும், சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்'

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மட்காது. இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். கடலில் மிதக்கும் இவற்றை உணவு என நினைத்து உண்ணும் கடல்வாழ் உயிரினங்களும் பெரும் தீங்குக்கு உள்ளாகின்றன. இது தவிர, பூமாலைகள் கடலில் அழுகி துர்நாற்றம் வீசும். இது, நண்டு உள்ளிட்ட பல்லுயிர் சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம். புதுச்சேரி அரசின் இந்த முயற்சிக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

MAHADEVAN NATARAJAN
ஆக 30, 2025 16:36

இது போல மாசு கட்டுப்பாட்டு வாரியம் பக்ரீத் அன்றும் மிக அதிகமான மிருகங்களை வதை செய்வதற்கு பதிலாக காய்கறி தடியங்காய் கொண்டு பாடு பலியிடுவதாக செய்ய வேண்டும்


m.arunachalam
ஆக 30, 2025 15:22

நம் மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 40000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மற்றும் உள்ள மாசு ஏற்படுத்தும் பொருள்கள் முடிவில் நம் பூமியை மாசுபடுத்தி நீர் வாழும் உயிரினங்களையும் அழிக்கின்றன. எனவே அனைவரும் ஒற்றுமையுடன் ஒரு சில கட்டுப்பாடுகளை தாமாகவே முன்வந்து அமுல்படுத்தினால் மிக மிக நல்லது.


venkates
ஆக 30, 2025 15:21

மாசு வாரியம் அதிகாரிகள் குடியிருப்பு வாஞ்சூர் மக்கள் வசிக்கும் பகுதில் குடியிருப்பு இருந்தால் மட்டுமே வேலை ஏன்று சட்டம் இயற்ற அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்க வேண்டுகிறேன் ,,,


lana
ஆக 30, 2025 11:14

தோல் தொழில் கழிவுகள் சாய கழிவுகள் இன்னும் பிற கழிவுநீர் கலப்பு நீர் நிலைகளை ஒன்றும் செய்யாது. விநாயகர் சிலைகள் மட்டுமே மாசு ஏற்படுத்தும். தீபாவளி பட்டாசு போன்றது இதுவும்


revathy somu
ஆக 30, 2025 11:09

ஒவ்வொரு ஊரிலும் ஒரு குளம் தேர்ந்தெடுத்து, அல்லது செயற்கையாக உண்டுபண்ணி அதில் சிலைகளை கரைத்தால் ரசாயணம்,செயற்கை நிறங்கள், போன்றவற்றால் சுற்று சூழல் கெடுவதும், மற்ற உயிர்களுக்கு சேதம் விளைவிப்பதும் தவிர்க்கப்படும். காலத்திற்கேற்ப நம் கொண்டாட்டம் மாற்றி அமைத்துக்கொள்ளல் அவசியம்.


Karthik Kumarasamy
ஆக 30, 2025 10:56

அப்போ அந்த பிளாஸ்டர் ஒப்பி பாரிஸ் சிலைகளை மறுசுழற்சி செய்ய ஒரு ஐடியா கூட இல்லையா


Rameshmoorthy
ஆக 30, 2025 09:29

Good initiative and all the best


chandrakumar
ஆக 30, 2025 08:43

மிகவும் வரவேற்கத்தக்க நல்ல முயற்சி வாழ்த்துக்கள்


மாடலோ மாடல்
ஆக 30, 2025 06:30

வினாயகர் சதுர்த்தி தடை செய்ய இந்த மாடல் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது


Kasimani Baskaran
ஆக 30, 2025 05:03

பல லட்சம் டன் கழிவு நீரை எந்த வித சுத்திகரிப்புக்கு இல்லாமல் கடலுக்குள் அனுப்பும் பொழுது விநாயகரை கரைப்பதில் நீர் நிலைகள் மாசுபட்டுப்போகிறது என்பது சுத்த பயித்தியக்காரத்தனம். இயற்க்கை வண்ணங்களை பயன்படுத்தினால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை