உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்: நிர்மலா சீதாராமன்

வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, கோவையில் இன்று (நவ., 11) பாஜ நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் முதலிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:தமிழகத்தில் எப்பொழுதும் சொல்ல கூடியது, எங்களுக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. எல்லா பணமும் வட மாநிலங்களுக்கு போய்விடுகிறது. 20 ரூபாய் வரி கட்டினால், அதில் எங்களுக்கு ரூ.2 கூட திருப்பி கைக்கு வருவதில்லை என்பதுதான்.திமுக பல வருடங்களாக ஆளுமையில் இருந்த கட்சி. கோவைதான் முக்கியமான தமிழகத்திற்கு அதிக நிதி கொடுக்கிறது. கோவைக்காரர்கள் எல்லோரும் எழுந்து நின்று, நாங்கள் தான் நிறைய பணம் கொடுக்கிறோம், எங்களுக்கே எல்லா பணமும் வருகிறதா, இல்லையா? நாங்கள் கட்டும் வரியில் எங்களுக்கு எவ்வளவு பணம் திருப்பி வருகிறது என்று கேட்டால் நம்ம அரியலூர் என்னவாகும், ராமநாதபுரம் என்னவாகும்? நாம் எல்லோரும் நின்று திமுகவிடம் கேள்வி கேட்க வேண்டும். பிரதமர் மோடி யாருக்கும் குறை வைக்காமல் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். இங்கு வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும். நான்கு விஷயத்தை படிக்க வேண்டும். கல்வி திட்டம் நாடு முழுவதும் எல்லோரும் ஏற்றுக்கொண்டு நன்றாக பண்ணி கொண்டு இருக்கிறார்கள். கேரளாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி கூட, பிஎம்ஸ்ரீ கல்வி திட்டம் நமக்கும் வர வேண்டும். கல்வி தரம் உயர வேண்டும் என நினைக்கின்றனர். கல்விக்காக மத்திய அரசு என்ன திட்டங்கள் கொண்டுவந்தாலும் உடனே, அதை எதிர்த்து தமிழக அரசு போராடுகிறது. திமுக ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தவர் பிரதமர் மோடி.மக்கள் மத்திய அரசை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதால் அதன் திட்டங்களை இவர்கள் எதிர்க்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுகவினர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? தற்போது கிராமப்புற மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சட்டசபையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஏன் உங்களுக்கு கலக்கம் வந்துவிடுகிறது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில், திருப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியை நாம் எல்லோரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ramesh
நவ 12, 2025 11:14

தமிழ்நாட்டு மாநில முதல்வர் கேட்கிறார் தங்களுடைய மாநிலத்துக்கு நிதி சரிவர தரவில்லை என்று கேட்கிறார் . ஆனால் தாங்கள் ராமநாதபுரத்தையும் பக்கத்தில் உள்ள ஊரையும் பற்றி பேசுகிறீர்கள் . அவருடைய மாநிலத்து வளர்ச்சிக்காக தான் கேட்கிறார் அதற்கு பதில் இல்லாமல் வேறு பதில் தருகிறீர்கள் நிதி மாதிரி அவர்களே


Narayanan Muthu
நவ 11, 2025 19:16

இது ஒரு தகர டப்பா...சத்தம்தான் பெரிதாக இருக்கும். அனால் ரசிக்க முடியாது. அதுபோல்தான் இவர்கள் பேச்சும் .


T.sthivinayagam
நவ 11, 2025 18:26

எலக்சன் கமிஷனர் தேர்ந்து எடுக்க வேண்டிய குழுவில் இருந்த உச்ச நீதிமன்றம் உறுப்பினரை நீக்க வேண்டிய அவசியம் ஏன் பாஜகவிற்கு ஏற்பட்டது.என்று வாக்காளர்கள் கேட்கிறார்கள்.


Sundar R
நவ 11, 2025 17:51

Educated and Bright people in Tamil Nadu, prefer a permanent ouster of the DMK from the Electoral Rolls over the 2026 Electoral Defeat of the DMK. In any way, NDA has got the stake.


அப்பாவி
நவ 11, 2025 17:13

இன்னும் எத்தனை வருஷம் உ.பி க்கு அள்ளிக் கொடுத்து முன்னேத்துவீங்க? 2047? 2075?


Sangi Mangi
நவ 11, 2025 16:33

யாருக்குமே தெரியாம ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள்ள ராத்திரி 12 மணிக்கு .................. பெண்ணை எவனாவது சமூக விரோதிகள் தூக்கிட்டு போய் கெடுத்தா சட்டம் ஒழுங்கு சரியில்லை தமிழ்நாடு காவல்துறை சரியில்லை மு.க.ஸ்டாலின் பதவி விலகனும் என்று நவ துவாரங்களிலும் புகை வரும் அளவுக்கு கத்துவோம் கதறுவோம் ஆனால் இந்தியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் குடு வெடித்து 9 பேர் செத்தால் உள்துறை ராணுவம் போலீஸ் ரா என சகல அதிகாரத்தையும் கையில் வைத்துள்ள பாஜக அரசுக்கு டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தார்மீக பங்கும் இல்லை சட்டம் ஒழுங்கு சரியா தான் இருக்கு காவல்துறை சரியாகத்தான் இருக்கு முதலமைச்சர் பதவி விலகத் தேவையில்லை அப்படின்னு சொல்லுவோம் அப்படிதானே? பங்கர்ல பதுங்கிட்டாய்ங்க போல


Rajah
நவ 11, 2025 17:26

பாகிஸ்தான் சென்று இந்தியர்களாலும் குண்டு வைக்க முடியும். ஆனால் அதற்கு பாகிஸ்தானியர்கள் உதவி தேவை. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் உட்பட யாருமே அப்படி செய்யமாட்டார்கள். அவர்கள் தேசப்பற்று உள்ளவர்கள். மாறாக பாகிஸ்தானியர்கள் குண்டு வைப்பதற்கு உதவினால் அந்நாட்டு உளவுத்துறையும் தடுமாறத்தான் செய்யும். யாருக்குமே தெரியாம ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுக்குள் ராத்திரி 12 மணிக்கு சீரழிக்கப்பட்ட பெண் நமது குடும்பத்தில் ஒருவராக இருந்தால் அதன் வலி தெரியும். ஆந்திராவில் இருந்து வந்த பெண்ணை போலீஸ்காரர்களே சீரழித்ததை என்னவென்று சொல்வது. காவல்துறைக்கு யார் பொறுப்பு? சந்தேகத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசு செயல் படுகின்றது என்று போர்க்கொடி தூக்குவீர்கள். முதலில் தீவிரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தீவிரவாதிகள்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தளவில் தீவிரவாதிகளை அழிப்பதற்கு உளவுத்துறைக்கு உதவிவியாக இருங்கள். நாட்டை நேசியுங்கள்.


Rajah
நவ 11, 2025 17:32

உங்களுக்கு பங்கர்ல பதுங்குற விடயமெல்லாம் தெரிந்திருக்கு. அனுபவமோ?


Barakat Ali
நவ 11, 2025 19:02

திமுகவின் கொத்தடிமைகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் தீவிரவாதம் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் புரியவில்லை .....


Indian
நவ 11, 2025 16:27

ஓரவஞ்சனை பி சே பி ஐ தான் கேள்வி கேட்கணும்


Indian
நவ 11, 2025 16:26

வன்மத்தோடு நடப்பது பி சே பி தான் ...பி சே பி ஐ தான் கேள்வி கேட்கணும்


சாமானியன்
நவ 11, 2025 16:09

திமுக மாநில அரசை கலைக்க எல்லாவிதமான முகாந்திரமும் இருந்தும் அதனை பாஜக அரசு ஏன் அம்மா செய்யத் தயங்குகிறார்கள் ?


DMK
நவ 12, 2025 00:16

திமுக அரசை களைத்தாலும், மீண்டும் திமுக தான் வெற்றி பெற போகுது. அடுத்து 5 வருடமும் புலம்பியே.......


ஆரூர் ரங்
நவ 11, 2025 15:52

கிருஸ்தவர்கள் அதிகமுள்ள 5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சராசரியை விட ஐந்து மடங்கும் முஸ்லிம் மெஜாரிட்டி காஷ்மீருக்கு பத்து மடங்கு அதிக மத்திய நிதியும் அளிக்கப்படுகிறது. இதை திமுக கேள்வி கேட்பதுண்டா?.என்ன காரணம் எனத் தெரியுமா?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை