உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் விடாமுயற்சி: மீண்டும் பாராட்டிய செல்லூர் ராஜூ

காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் விடாமுயற்சி: மீண்டும் பாராட்டிய செல்லூர் ராஜூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார் எனவும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m1jhj80b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' எனப் பதிவிட்டிருந்தார். பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.,யை பாராட்டியது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. ''பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எளிமையாக யார் இருந்தாலும் நான் பாராட்டுவேன்'' என செல்லூர் ராஜூ பதிலளித்தார். பின்னர் அது சர்ச்சையான நிலையில் அப்பதிவை நீக்கினார்.இந்த நிலையில், இன்று (ஜூன் 19) பிறந்தநாள் கொண்டாடும் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன், அவரை பாராட்டியும் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ. அவர் கூறுகையில், ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்றார். சில நாட்களுக்கு முன்னதாக தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, 'எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?' எனப்பேசியதால், விரைவில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுலை தொடர்ந்து செல்லூர் ராஜூ பாராட்டிவருவது, முக்கியமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பேசும் தமிழன்
ஜூன் 19, 2024 18:18

ரொம்ப மெனக்கெட்டு.... அதிமுக கட்சியில் இருக்க வேண்டாம்..... உங்களுக்கு மிகவும் பிடித்த கான் கிராஸ் கட்சியில் சேர்ந்து...... இத்தாலி போலி காந்தி கும்பலுக்கு சேவை செய்யலாம்.


naranam
ஜூன் 19, 2024 16:04

வேண்டுமென்றால் அந்தப் பக்கம் பொய்விடுங்களேன்!


samvijayv
ஜூன் 19, 2024 14:56

இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படியே மற்றவர்களை சார்ந்தே இருப்பது, செல்வப்பெருந்தகை அடுத்து நம்ம செல்லூர் ராஜ்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 14:41

இப்படிப் பேசிப் பேசி தமிழ்த்தேசத்தை ஆளும் புலிகேசியின் கண்ணில் அட ஆமாங்க கண்ணில்தான் விரலை விட்டு ஆட்டுகிறார் செல்லூர் ராஜு .......


RAMAMOORTHY GOVI
ஜூன் 19, 2024 13:53

செல்லுர் ராஜூக்கு அடிக்கடி மறை கழண்டு போயிடுது


எவர்கிங்
ஜூன் 19, 2024 12:53

தெர்மோகோல் மூடி போலவே?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 12:25

காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி செய்வதாக செல்லூர் ராஜூ கூறுவதை பார்த்தால் இவர் அதிமுகவை கட்டிக்காக்க திரு.எடப்பாடி பழனிச்சாமி முயற்சி எதுவும் செய்யவில்லை என்று குத்தி காட்டுவது போல் உள்ளது. திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்லூர் ராஜூ பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவது போல் இருக்கலாம். இவரும் எதாவது ஸீலிப்பர் செல்லகா இருக்கலாம். ஏனெனில் ராகுல் காந்தியும் இதேபோல் தான் பேசுகிறார். அவரும் ஏதோ பாஜகவின் உள் எதோ ஸீலிப்பர் செல் உள்ளதாக கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூங்காமல் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும்.


சுலைமான்
ஜூன் 19, 2024 12:07

எங்க... தாய்லாந்து போயிதானே....


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2024 11:50

தெர்மோ கோல் செல்லூர் ராஜூ, ராகுல்காந்தி அலைவரிசை மனநிலை ஒத்து போகுது. இருவரின் பேச்சுக்களால் பி ஜே பி வளர்ச்சி அடைந்துள்ளது


Rpalnivelu
ஜூன் 19, 2024 11:48

இந்த ஆளு விடியலின் பி டீம். கோடநாடு எபெக்ட்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை