உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிக்கெட் இல்லாமல் பயணிப்போரை பிடிக்க ரயில்வேயில் 50 சிறப்பு குழுக்கள்

டிக்கெட் இல்லாமல் பயணிப்போரை பிடிக்க ரயில்வேயில் 50 சிறப்பு குழுக்கள்

சென்னை: தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். எனவே, விரைவுரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. ஆனால், பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல், முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இது, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண, ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறையையொட்டி, டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு சோதனைகள் நடத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இருப் பர். முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

JAYA Chandran
செப் 29, 2025 11:35

regularly.


Mohamed Ali
செப் 28, 2025 19:25

Namma.tamil.naattukkaran.tikketvaangamal.payanamseyyamattan.irunthalum.countaril .gumbalirunthal.muthalil.tranil.tti..idam... Sollivittu.ticket ..eduppar.


Ramesh Sargam
செப் 27, 2025 12:25

ஒரு அறுபது வருடம் முன்பு இதுபோன்ற சோதனையை செய்திருந்தால் இன்று தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்காது. புரிஞ்சவன் புத்திசாலி.


Seyed Omer
செப் 27, 2025 11:40

இந்த பில்டப் எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமே வடக்கன் ஓசியில் தான் பயணிப்பான் என்பதே நிதர்சனம்


BALAJI
செப் 27, 2025 09:42

இந்தமாதிரி பண்றங்க


baala
செப் 27, 2025 09:36

இதெல்லாம் கண் துடைப்பு. திருத்தவே முடியாது.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 27, 2025 09:13

எதற்கெடுத்தாலும் வட மாநிலத்தினரை குற்றம் சொல்வது திராவிடஸ்தானின் நாகரீகமாகிவிட்டது.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 27, 2025 08:55

இந்த 50 சிறப்புக்குழுவின் சோதனை முயற்சியால் பிடிபட இருக்கும் பயணியர் செலுத்தும் அபராத தொகையை விட சிறப்புக்குழுவின் ஊதியம் பலமடங்கு அதிகமாக இருக்கும்.


ப.கொழந்தசாமி
செப் 27, 2025 08:21

பாரத நாடு முழுவதும் இச் சோதனையைச் செய்க. ஏன் தமிழ்நாட்டில் மட்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 08:04

இதை எழுபது /என்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் தமிழகம் ஒரு குடும்பத்தால் சுரண்டப்படுவதைத் தடுத்திருக்கலாம் ......


சமீபத்திய செய்தி