உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும்

சென்னை:'தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்த, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். பொதுவாக காலை வேளையில், லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த சில நாட்களில், இதே நிலை இருக்கும். வரும் 9, 10ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !