உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை தொடர்பான புகார்கள்; உதவி எண்கள் அறிவிப்பு

மழை தொடர்பான புகார்கள்; உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: மழை தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டது. பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hylgx1yq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்!மாநில உதவி எண் - 1070மாவட்ட உதவி எண்- 1077வாட்ஸ் அப்- 94458 69848விழுப்புரம் உதவி எண்கள் அறிவிப்பு* 1077, 04146-223 265, 7200151144 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARI KUMAR
நவ 30, 2024 08:26

மின்சார வயர்கள் சாலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது, இதற்கு யாரிடம் புகார் அளிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ