உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., பற்றி ராஜா கேலி பழனிசாமி, தினகரன் ஆவேசம்

எம்.ஜி.ஆர்., பற்றி ராஜா கேலி பழனிசாமி, தினகரன் ஆவேசம்

சென்னை:மறைந்த எம்.ஜி.ஆர்., குறித்து, தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா தரக்குறைவாக பேசிய வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. அதற்கு, அ.தி.மு.க., - அ.ம.மு.க., கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: எம்.ஜி.ஆர்., குறித்த, ஆ.ராஜாவின் தரம்தாழ்ந்த பேச்சு, கடும் கண்டனத்துக்கு உரியது. மறைந்த தலைவர்கள் குறித்து, அவதுாறாகப் பேசி ஆதாயம் தேட நினைப்பது தான், சுயநலவாதி ராஜாவின் வாடிக்கை. இனி வரும் காலங்களிலும், தி.மு.க.,வினர் தலைகீழாக நின்று, தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் தலைவர்களின் புகழை எள்ளளவும் குறைக்க முடியாது. அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தி.மு.க.,வை தீயசக்தி எனக் கூறி, தான் உயிரோடு இருக்கும் வரை, ஆட்சி பொறுப்புக்கு வர விடாமல் அடியோடு சாய்த்தவர் எம்.ஜி.ஆர்., அவர் மறைந்த பின்பும் தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே, ராஜாவின் தரம்தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை