உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராஜஸ்தானி - தமிழ் சேவா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 ராஜஸ்தானி - தமிழ் சேவா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: 'ராஜஸ்தானி - தமிழ் சேவா விருது பெற தகுதியுடையோர், டிசம்பர் 5க்குள் விண்ணப்பிக்கலாம்' என, ராஜஸ்தானி அசோசியேஷன் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில், சமூகத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கு பவர்களுக்கு, 'ராஜஸ்தானி - தமிழ் சேவா விருது' வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு, வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு, கலை, கலாசாரம், கல்வி, சுகாதாரம், தொழில் முனைவு, சுற்றுச்சூழல், பொது சேவை, நிர்வாகம், ஊடகம், சமூக நலன் உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்கள், 2026ம் ஆண்டுக்கான ராஜஸ்தானி - தமிழ் சேவா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில், டிசம்பர் 5க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி