உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது

ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது

சென்னை,:''ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் சென்று வழிபடலாம். இதில் எந்த முரண்பாடும் கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு வராக சாமி கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார். நேற்று காலை கோவிலுக்கு சென்று, அஷ்டதல பாத பத்மாராதனை சேவையில் பங்கேற்று, ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில், தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.தரிசனம் முடிந்து வெளியே வந்த, அவர் அளித்த பேட்டி:ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று இறைவனை வழிபடலாம். அதில் எந்த முரண்பாடும் கிடையாது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அ.தி.மு.க., துவக்கி விட்டது. தேர்தல் தொடர்பான, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை