உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-18

ரம்ஜான் சிந்தனைகள்-18

பாங்கோசை கேட்டால்... பள்ளிவாசலில் தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள். இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். * கியாமநாளில் மக்கள் துன்பத்தில் உழலும் போது, பாங்கு சொன்னவர்கள் கஸ்துாரி மணம் கமழும் மேடைகளில் அமர்ந்திருப்பர். * பெண்களே! நீங்கள் பாங்கு சொல்லும் சப்தத்தைக் கேட்டால், பாங்கு சொல்பவர் போல் நீங்களும் சொல்லுங்கள். * பாங்கு சொல்பவரின் குரல் கேட்கும் துாரத்தில் இருக்கும் ஜின்னும், மனிதனும் கியாமநாளில் அவருக்காக சாட்சி சொல்வார்கள்.* பாங்கு சொல்பவர் கியாமநாளில் கழுத்து அதிகம் நீண்டவராக இருப்பார்.* ஒருவர் 12 ஆண்டுகள் பாங்கு சொன்னால், அவருக்கு சுவர்க்கம் நிச்சயம் உண்டு. மேலும் ஒவ்வொரு நாளும் அவருக்கு அறுபது நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது.* பாங்கோசை கேட்டு எவர் பேசுகிறாரோ, அவருக்கு மரண வேளையில் கலிமா நாவில் வர தடையாக இருக்கும்.* பாங்கு, தல்பியா சொல்பவரும் மண்ணறைகளில் இருந்து வெளியேறும்போது, பாங்கு சொல்பவர் பாங்கு கூறிக்கொண்டும் தல்பியா சொல்பவர் தல்பியா சொல்லிக் கொண்டும் வருவார்கள்.* தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் ஓடுகிறான்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ