உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி

எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதம் குடும்பத்தினரின் சமரச முயற்சி தோல்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய முடிவில், ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதால், அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.கடந்த 10ம் தேதி, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, 'நானே தலைவர்' என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அவரது திடீர் அதிரடி, அக்கட்சிக்குள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோபம்

எப்படியாவது ராமதாசை சமாதானப்படுத்தி, அன்புமணியை மீண்டும் தலைவராக அறிவிக்கச் செய்திட வேண்டும் என, ராமதாஸ் குடும்பத்தில் ஒரு தரப்பினரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், கடந்த இரு நாட்களாக முயற்சி மேற்கொண்டனர்; அதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.எடுத்த முடிவில் ராமதாஸ் பிடிவாதமாக இருப்பதாக, அவரை சந்தித்தவர்கள் கூறுகின்றனர்.ராமதாசை சந்திக்கும் நிர்வாகிகள், 'கட்சியின் எதிர்காலம் அன்புமணிதானே. அவரை நீக்கியது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, அவரை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும். கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை நீங்களே எடுக்கலாம்' என கூறியுள்ளனர்.இதனால் கோபமடைந்த ராமதாஸ், இன்னும் சில நாட்களுக்கு தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் எனக் கூறி விட்டதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர். வரும் மே 11ம் தேதி, மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் ஒற்றுமை மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டின் தலைவராக அறிவிக்கப்பட்ட அன்புமணி, அதன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனால், தலைவர் பதவி பறிக்கப்பட்டு, செயல் தலைவராக நியமிக்கப்பட்டதால், அவர் அமைதியாகி விட்டார்.

குழப்பம்

கடந்த 10ம் தேதியிலிருந்து, மாநாட்டு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அன்புமணியை தலைவர் என்று குறிப்பிடுவதா, செயல் தலைவர் என்று குறிப்பிடுவதா என்ற குழப்பத்தில், கட்சியின் மற்ற நிர்வாகிகளும் மாநாட்டு பணிகளில் ஈடுபடவில்லை.நடப்பு அரசியல் நிகழ்வுகள், பிரச்னைகள் தொடர்பாக ராமதாசும், அன்புமணியும் தினமும் அறிக்கை வெளியிடுவர். 'பேஸ்புக், எக்ஸ்' தளத்தில் பதிவுகளை வெளியிடுவர். கடந்த மூன்று நாட்களாக, அவர்களிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.இதனால், பல ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரம் மாநாடு எப்படி நடக்குமோ என்ற குழப்பம் பா.ம.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஏப் 13, 2025 15:50

அழுகிய மாம்பழத்தை அதிக நாட்கள் மூடி மறைத்து வைக்க முடியாது,நாற்றமே காட்டிக் கொடுத்து விடும்!


naranam
ஏப் 13, 2025 14:08

அந்த ஜாதி வெறி பதவி வெறி பிடித்த குடும்பத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.


sethu
ஏப் 13, 2025 13:58

இதுதான் கருணாநிதித்தனம் கட்சியில் தன்னை முன்னிறுத்தி உயர்த்திக்கொள்ள நடக்கும் நாடகம் .


K V Ramadoss
ஏப் 13, 2025 13:53

என் இது ஒரு தந்திரமாக இருக்கக்கூடாது? தந்தை ஒரு கூட்டணியிலும் மகன் மற்றோரு கூட்டணியிலும் இருந்தால், எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி நிசசயம்.


haridoss jennathan
ஏப் 13, 2025 12:52

ஐயா ப மா க்காவை உதிக்க வைத்த பெரியவர். அதில் பொதுக்குழுவை கூட்டித்தானே, தலைமை வகித்தவரை தேர்ந்து எடுத்தீர்கள் .இப்போது நீங்கள் தலைமைய நீக்கி உத்தரவு வழங்குவது சரிதானா? உங்கள் கட்சி அப்போது ஏழ்மை மக்களின் ஒரு ரூபாயில் உறுப்பினர்கள் சேர்ந்து தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்றது. டாக்டர் ஐயாவின் முடிவு பொதுக்குழு ஏற்றுக்கொண்டது என்பதை மக்கள் எப்படி நம்ப வேண்டும்? ஒரு நல்ல எதிர் கட்சியாக வளர்ந்து வரும் பொது இப்படி ஒரு திருஷ்டி.


நல்லதை நினைப்பேன்
ஏப் 13, 2025 12:27

யாரோ ஒருவர் என் குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றாராம்


மோகனசுந்தரம் லண்டன்
ஏப் 13, 2025 11:24

படித்த......


பெரிய குத்தூசி
ஏப் 13, 2025 11:01

இது எல்லாமே அரசியல் மக்களை ஏமாற்றும் நாடகம், அன்புமணிக்கு ஒரு சாப்டீ எண்ணத்தை மக்களிடம் உண்டுபண்ணி PMK க்கு வாக்குகளை ஈர்க்கும் முயற்சி, இது பலனளிக்காது. இல்லையேல் கொஞ்சநாளைக்கு பிஜேபி ல் சேர்ந்து தனக்கென ஒரு வட்டத்தை பலத்தை உருவாக்கி ராமதாசுக்கு பின்னர் சொந்த குடும்ப கம்பெனி கட்சியை ஏற்று அரசியலில் வெற்றிக்கொடியை நாடுவது என்ற திட்டங்களே, இவர்களின் நாடகம். திமுகவின் மக்களின் மூளையை கழுவும் மூலோபாய தன்மையில் பயணிக்கலாம் என ராமதாஸும் அன்புமணியும் போடும் திட்டம் தான் இந்த ட்ரமாஸ். வன்னியர்கள் 70 சதவிகிதம் திமுக 25 சதவிகிதம் அதிமுகவில் உள்ளனர். 3-5 சதவிகிதம் பாமக வுக்கு உள்ளது. சாதிக்கட்சியாக முத்திரைகுத்தப்பட்ட பாமக ஒளிர்வது கடினம். பேசாமல் அன்புமணி மொத்த PMK கும் முழுக்கு போட்டுவிட்டு பிஜேபி ல் இணைந்து சாதிக்கலாம். இல்லையேல் இவர்களின் ட்ராமா திட்டம் நிறைவேறாது.


Vasan
ஏப் 13, 2025 10:02

Mango season will be over in 3 months.


kumar
ஏப் 13, 2025 09:50

அன்புமணி பிசினஸை முடித்து விட்டார். புதிய பிசினஸை ராமதாஸ் தொடங்குகிறார் இதில் என்ன வியப்பு


முக்கிய வீடியோ