உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராம்ராஜ் வேட்டி வாரம்: புதிய ரக வேட்டி, சட்டை அறிமுகம்

 ராம்ராஜ் வேட்டி வாரம்: புதிய ரக வேட்டி, சட்டை அறிமுகம்

சென்னை: ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு, குறைந்த விலையில், வேட்டி, சட்டை செட்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. பாரம்பரிய கலாசார உடை, நெசவாளர் வாழ்வில் வளர்ச்சியையும், வாடிக்கையாளர் முகத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதை, நோக்கமாக வைத்து, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 6ம் தேதி வேட்டி தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் வேட்டி வாரம் கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம், புதிய ரக வேட்டி, சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரகங்களை, ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கல்ச்சர் கிளப் கலர் சட்டை, வேட்டி செட், 595 மற்றும் 695 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப் பட்டது. மேலும், லிட்டில் ஸ்டார் கலர் சட்டை, வேட்டி செட், 395 மற்றும் 495 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக விழாவில், ராம்ராஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின், தலைமை நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை