உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 25ல் மீண்டும் கூடுகிறது அமைச்சரவை

25ல் மீண்டும் கூடுகிறது அமைச்சரவை

சென்னை:தமிழக அரசின், 2025 - 26ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், மார்ச் 14ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. பொது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, துறை வாரியாக நிதித்துறை வாயிலாக கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இவை பரிசீலிக்கப்பட்டு, பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளன. அதற்கு ஒப்புதல் தர, வரும் 25ம் ்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ளது. கடந்த 10ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 'பெல்ட் ஏரியா' எனப்படும் அரசு நிலங்களில் குடியிருக்கும், 86,000 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை