உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்; அரசாணை பிறப்பிக்க பரிந்துரை

ஜாதி, மதமற்றவர் சான்றிதழ்; அரசாணை பிறப்பிக்க பரிந்துரை

சென்னை: திருப்பத்துார் மாவட்டம், தில்லை நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், தனக்கு ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி, 2023ல் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை' என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று, சந்தோஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ் மேல்முறையீடு செய்தார். தன் குழந்தைகளை ஜாதி, மதம் அற்ற சமூகத்தில் வளர்க்க விரும்புவதாகவும், ஜாதி அல்லது மதம் ஒதுக்கீட்டின் கீழ், அரசிடம் இருந்து எந்த சலுகையையும், ஒருபோதும் கோர போவதில்லை என்றும் கூறியிருந்தார்.இந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருப்பத்துார், கோவை மற்றும் சென்னை அம்பத்துார் தாசில்தார்களால், 'எந்த ஜாதி, மதத்தையும் சேர்ந்தவர் அல்ல' என்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், அரசு தரப்பு வாதங்கள், இவ்வழக்கில் முரண்பாடாக உள்ளன. ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் கோரும் மனுதாரரின் செயல் பாராட்டத்தக்கது.ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை, அரசியலமைப்பு சட்டம் தடை செய்தாலும், இடஒதுக்கீடு கொள்கைகள் வாயிலாக, சமூக வாழ்க்கை, அரசியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், ஜாதி, மதம் இன்னும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.எனவே, ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூன் 12, 2025 19:37

தாசில்தார் அவர்களுக்கு அதிகாரம் இல்லையெனில் எப்படி 3 தாசில்தார்கள் வழங்கினர் ? என்ன நடைமுறை இது?


தத்வமசி
ஜூன் 12, 2025 12:02

இப்போது புதிய ஜாதி துவக்கப்படுகிறது. ஏன் ஜாதிகள் அடிப்படையில் வேலை மற்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சிந்திக்கவில்லை ? ஜாதியை ஊக்குவிப்பதும் சரியல்லவே. ஜாதி என்பது வேறுன்றிய ஒன்று. இதை தடுக்க யாரும் முயல்வதாக தெரியவில்லை. இப்போது இருக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, வேட்பாளர்களில் ஒதுக்கீடு, கல்வியில் ஒதுக்கீடு என்று பல விதங்களில் ஜாதிகளை அரசே முன் வைப்பதால் எப்போதுமே ஜாதிகளும் ஒதுக்கீடுகளும் ஒழியவே போவதில்லை.


தத்வமசி
ஜூன் 12, 2025 12:02

இப்போது புதிய ஜாதி துவக்கப்படுகிறது. ஏன் ஜாதிகள் அடிப்படையில் வேலை மற்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சிந்திக்கவில்லை? ஜாதியை ஊக்குவிப்பதும் சரியல்லவே. ஜாதி என்பது வேறுன்றிய ஒன்று. இதை தடுக்க யாரும் முயல்வதாக தெரியவில்லை. இப்போது இருக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, வேட்பாளர்களில் ஒதுக்கீடு, கல்வியில் ஒதுக்கீடு என்று பல விதங்களில் ஜாதிகளை அரசே முன் வைப்பதால் எப்போதுமே ஜாதிகளும் ஒதுக்கீடுகளும் ஒழியவே போவதில்லை.


sivakumar Thappali Krishnamoorthy
ஜூன் 12, 2025 10:50

சாதிய மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியில் ,ஜாதி, மதம் அற்றவர் என்கிற சான்றுக்கு இட ஒதுக்கீடு வரும் காலத்தில் இருக்குமா?


jagadesh
ஜூன் 12, 2025 10:23

நீங்க ஜாதி மதம் அற்றவர் என்று சொன்னால், நாங்க நாட்டுல எப்படி அரசியல் செய்ரது, ஜாதிக்காரன்கிட்ட எப்படி ஒட்டு கேட்கிறது, எப்படி மதம் மாத்தி பொழப்பு நடத்துறது, வெளிநாட்டிலிருந்து எப்படி பணம் போகிறது? பொழப்பே நாறிப்போயிரும்


Kanns
ஜூன் 12, 2025 10:14

First it Must be Enforced in NonSecular Coubtrues, then in Secular Countries. Otherwise, PseudoSecularists Will Only Convert Our Secular Country & People by Erasing Our AgeOld Conserving Identities Caste-Religion Must be Used Only Constructively Not Destructively-Divisively


GMM
ஜூன் 12, 2025 07:25

மனுதாரர் பெயர் சாதி, மத, மொழி அடையாளம் படுத்தலாம். ஆகவே 101 என்று நம்பர் கொடுத்து சாதி, மத, மற்ற ஆணை வெளியிட கூடாதா. பெற்றோர் பெயரில் சாதி இருக்கும். அதுவும் பதிய வேண்டாம்? முட்டாள்தனம் . தனி மனித விருப்ப அல்ல அரசு நிர்வாகம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை