உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

கோவிலில் ரீல்ஸ் வீடியோ; கேள்வியால் விளாசியது ஐகோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவேற்காடு கோவிலில், முன்னாள் பெண் தர்மகர்த்தா வளர்மதி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நடித்த அறநிலையத்துறை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.நாகை மாவட்டம், தெற்கு பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்த கே.ஜெயபிரகாஷ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், 'சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. மிகவும் பழமையான இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத் திருவிழா பிரமாண்டமான முறையில் நடக்கும். தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, கோவிலில் நடந்த தர்மசங்கடமான நிகழ்வு பற்றிய காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவின. அந்த காட்சியில், கோவிலின் அறங்காவலர் வளர்மதியுடன், 12 பெண்கள் இணைந்து, கோவில் கருவறையின் முன் நடனமாடியுள்ளனர். அதை, 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அறங்காவலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டு முறை புகார் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. கோவிலின் புனிதம், மதிப்பை குலைக்கும் வகையில் நடந்த அறங்காவலர் உள்ளிட்டோர் மீது, ஹிந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ' திருவேற்காடு கோவிலில்,'ரீல்ஸ்' வீடியோ எடுத்த அறங்காவலர் மற்றும் பெண் ஊழியர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஹிந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று(அக்.,29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருவேற்காடு கோவிலில், எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவில், நடித்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியுள்ளதாக அறநிலையத்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது.

மன்னிப்பு

இதற்கு ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது: கடவுள் மீது பக்தி உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மன்னிப்பு ஏற்று நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர்.ரீல்ஸ் வீடியோவில் நடனமாடிய கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பல்லவி
அக் 30, 2024 08:03

அவா என்ன சொன்னாலும் சரி செஞ்சாலும் சரி


தத்வமசி
அக் 30, 2024 06:56

பக்திப் படங்களை எடுக்கும் போது கோவில்களில் சூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தார்கள். மதுர மரிக்கொழுந்து வாசம் என்று பாடும் போது தேவையே இல்லாமல் அழகர் மழைக் கோவிலின் மூலஸ்தானத்தின் முன் மண்டபத்தின் மேல் சூட்டிங் நடத்த அனுமதி அளித்தார்கள். அப்போதெல்லாம் சொரனையே இல்லாதவர்கள் இப்போது மட்டும் எதற்கு சொரணை வர வேண்டும். மூலவர் மற்றும் உற்ச்சவர் திருவுருவச் சிலையை வைத்து ரீல்ஸ் எடுக்கட்டும் அதன் பிறகும் சொரணை வராது, சிரித்துக் கொண்டே ரசிப்பார்கள்.


A P
அக் 29, 2024 22:08

இந்தக் கோவிலில் இப்படி ரீல்ஸ் கூத்தடித்தவர்கள் சோற்றில் உப்பு போட்டு தின்பவர்களாக இருந்தால், மற்ற மத கோவிலில் உள்ளே வந்து, ரீல்ஸ் கூத்து அடிக்க வேண்டும். தைரியம் இருக்கிறதா ?


Kasimani Baskaran
அக் 29, 2024 19:13

பக்தி உள்ளவர்கள் கோவிலுக்குள் சென்றால் நல்லது. வேறு நோக்கத்தோடு சென்றால் கெடு பலன்கள்தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


D.Ambujavalli
அக் 29, 2024 18:44

கட்சி பலம் இருந்தால் கொலை செய்தால் கூட மன்னிப்புக்கேட்டால் கோர்ட் விட்டுவிடும்


Sathyanarayanan Sathyasekaren
அக் 29, 2024 18:16

எவ்வளவு நடந்தாலும் சொரணை இல்லாத இந்த தமிழக ஹிந்துக்கள் திரும்பவும், இதே திருட்டு திராவிட காஸ்லிசடைகளுக்கு, குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், 2000 பிட்சை காசுக்கும் ஆசைப்பட்டு வோட்டை போடுவார்கள்.


sridhar
அக் 29, 2024 18:11

‘ விளாசியது ‘ என்பது இது தானா . மன்னிப்பு கேட்டால் தண்டனை கிடையாதா . எல்லோருக்கும் இந்த சலுகைகள் உண்டா . கடவுளிடம் அபவாதம் செய்து விட்டு மனிதர்களிடம் மன்னிப்பு கேட்டால் மன்னிக்கும் அதிகாரம் மனிதனுக்கோ கோர்ட்டுக்கோ உண்டா ? திராவிட மாடல் கோர்ட் தீர்ப்பு.


என்றும் இந்தியன்
அக் 29, 2024 16:24

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதை சர்ச் மசூதிகளில் செய்து காட்டட்டும் அப்போது அது மத ஒரே அளவு மதிப்பு அரசு என்று சொல்லிக்கொள்ளலாம் இல்லையென்றால் இந்த திருட்டு திராவிட மடியல் அரசு இந்து / சனாதன தர்மம் எதிர்ப்பு /விரோத அரசு மட்டுமே என்று எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும்


M S RAGHUNATHAN
அக் 29, 2024 16:17

Building ஸ்ட்ராங் ஆனா basement வீக். சின்னதா ஒரு கண்டனம்.கொடுத்து கேசை இழுத்து மூடிவிடிவாங்கா.


KRISHNAN R
அக் 29, 2024 15:57

அய்யோ பாவம்...... வேறு யாரையும்...கேட்க முடியாது...அகப்பட்டவர்களை... கேட்கும் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை